இரத்தினபுரி, நிவிதிகல பாடசாலைகள் இன்று மூடல்

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலையால் சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் நிவிதிகல கல்வி வலயங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்றைய தினம் குறித்த கல்வி வலயங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வி பணிப்பாளர் சேபால குறுப்பாரச்சி எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

எனினும் இரத்தினபுரி மாவட்டத்தின் எம்பிலிபிட்டிய மற்றும் பலாங்கொட கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகள் இன்றை தினம் வழமை போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தேவையேற்பட்டால் இடம்பெயர்தோரை தங்கவைப்பதற்கு குறித்த வலய பாடசாலைகளை பயன்படுத்தி கொள்ள முடியும் என அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல் மற்றும் தென் மாகாணங்களில் அனர்த்தத்திற்கு உள்ளான பகுதிகளில் உள்ள பாடசாலைகளை இன்றைய தினம் மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அந்த மாகாணங்களின் முதலமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *