எந்தவொரு விசாரணைக்கும் முகங்கொடுக்கத் தயார் – இராணுவ தளபதி
(UDHAYAM, COLOMBO) – “இலங்கை இராணுவம் எந்தவொரு போர்க்குற்றங்களிலும் ஈடுபடவில்லை” என, புதிய இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், எந்தவொரு விசாரணைக்கும் முகங்கொடுக்கத் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் 22 ஆவது இராணுவத் தளபதியாக பொறுப்புக்களை ஏற்கும் நிகழ்வு, இராணுவ தலைமையகத்தில் இன்று இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவம் சட்டத்தை மதிக்கும் இராணுவமாகும். தண்டனை சட்டம் மற்றும் இராணுவ சட்டம் என இரண்டுக்கும் இராணுவம் உட்பட்டுள்ளது….