பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு

(UDHAYAM, COLOMBO) – அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றை இன்று பிறப்பித்துள்ளது. இன்றைய தினம் கொழும்பு கோட்டையை அண்மித்த பகுதிகளில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க தயாராகிவருவதாக கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைய, கோட்டை பொலிஸார் ஊடாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அது குறித்து அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து குறித்த ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என்பன பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மற்றும் வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படுவதை, பயணிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு…

Read More

பர்பெச்சுவல் டெசரிஸ் நிறுவனத்தின் முதன்மை நிறைவேற்று அதிகாரியை வெளியேற்றுமாறு உத்தரவு…

(UDHAYAM, COLOMBO) – முன்கூட்டியே அறிவிக்காமல் பிணை முறி விநியோகம் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினுள் இருந்த பர்பெச்சுவல் டெசரிஸ் நிறுவனத்தின் முதன்மை நிறைவேற்று அதிகாரியை அங்கிருந்து வெளியேற்றுமாறு ஆணைக்குழு இன்று உத்தரவிட்டுள்ளது.

Read More

ஹட்டன் சமனலகமவில் மண்சரிவு அபாயம் 12 குடும்பங்களை வெளியேர உத்தரவு ..பிரதேசவாசிகள் வெளியேர மறுப்பு

(UDHAYAM, COLOMBO) – பாரிய மண்சரிவு காரணமாக ஹட்டன் சமனலகம பிரதேச த்தில் வசிக்கும் 12 குடும்பங்களை  சேர்ந்தவர்களை வீடுகளிலிருந்து வெளியேரி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஹட்டன் பொலிஸார் அறிவுருத்தல் விடுத்தபோதும் அப்பிரதேச மக்கள் அக்கோரிக்கையை நிராகரித்துள்ளனர் ஹட்டன் சமனலகம பிரதேசமானது மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தேசிய கட்டட அராய்ச்சி நிறுவகம் எதிர்வு கூறியுள்ளது 24 மணி நேரத்திற்குள் அப் பிரதேசத்தில்   125 மில்லி மீற்றருக்கு மேல் மழை பெய்யுமாயின் அந்த பிரதேசத்திலிருந்து வெளியேருமாறு பி.பதேசவாசிகளுக்கு அறிவுருத்தல்…

Read More

காஷமீரில் ஊரடங்கு உத்தரவு

(UDHAYAM, COLOMBO) – காஷ்மீரில் நிலைகொண்டுள்ள பிரிவினைவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தளபதி சப்சர் பட் கொல்லப்பட்டதை அடுத்து காஷமீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது. ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தளபதி நேற்று இடம்பெற்ற இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் போது கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன. இந்த நிலையில், சப்சர் பட் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீரின் தெற்கு மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தளபதியாக…

Read More

கழிவு முகாமைத்துவ தேசிய கொள்கையை தயாரிப்பதற்கான யோசனைகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவு

(UDHAYAM, COLOMBO) – கழிவு முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கையை தயாரிப்பதற்கான யோசனைகளை சமர்ப்பிக்குமாறு  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அமைச்சுக்களுக்கும், உள்ளுராட்சி மன்றங்களுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார். உள்ளுராட்சி மன்றங்களின் ஆணையாளர் உட்பட அரச அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதற்கான உத்தரவை பிறப்பித்தார். கழிவு முகாமைத்துவத்தின் போது உள்ளுராட்சி மன்றங்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள், அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய தீர்வுகள் உட்பட பல விடயங்கள் பற்றி இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது…

Read More

பிலியந்தளை பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் – அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் சாகல ரட்நாயக்காபொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு

(UDHAYAM, COLOMBO) – பிலியந்தளை மொரட்டுவை வீதியில் அரச  வங்கிக்கு முன்னால் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் சாகல ரட்நாயக்க பொலிஸ்மா அதிபரை உத்தரவு பிறப்பித்துள்ளார். போதைப் பொருள் சுற்றிவளைப்பிற்காக சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதப்பட்ட  இந்த சம்பவத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொரு அதிகாரி காயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்….

Read More