(UDHAYAM, COLOMBO) – அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றை இன்று பிறப்பித்துள்ளது.
இன்றைய தினம் கொழும்பு கோட்டையை அண்மித்த பகுதிகளில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க தயாராகிவருவதாக கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைய, கோட்டை பொலிஸார் ஊடாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அது குறித்து அறிவிக்கப்பட்டது.
அதனையடுத்து குறித்த ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என்பன பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மற்றும் வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படுவதை, பயணிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.