தாய்ப்பால் அருந்திவிட்டு உறங்கிய குழந்தை உயிரிழப்பு
(UTV|JAFFNA)-தாய்ப்பால் இறுகியதால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு மாதக் குழந்தை ஒன்று நேற்று உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேவேந்திரன் சஞ்சி என்ற பெயருடைய இரண்டு மாதக் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு குழந்தைக்கு பாலூட்டிவிட்டு தூங்க வைத்துள்ளதுடன், மீண்டும் அதிகாலை பாலூட்டுவதற்காக குழந்தையை எழுப்பிய போது குழந்தை எழும்பாத காரணத்தால் குழந்தையை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். எவ்வாறாயினும் குழந்தை உயிரிழந்திருப்பதாக வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும்…