காலஞ்சென்ற ஊடகவியலாளருக்கு பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் இறுதி அஞ்சலி

(UDHAYAM, COLOMBO) – காலஞ்சென்ற ஊடகவியலாளர் பிரபாத் வீரரட்னவின் பூதவுடலுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். இம்புட்டான ,ஜயந்தி மாவத்தையிலுள்ள அவரது இல்லத்துக்கு கடந்த 9ம் திகதி இரவு சென்ற பிரதமருடன் அமைச்சர்களான மங்களசமரவீர , டொக்டர் ராஜித சேனாரத்ன, கயந்த கருணாதிலக, பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன் சூரிய ஆகியோர் காலஞ்சென்ற ஊடகவியலாளரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பிரதமர்…

Read More

தம்பர அமில தேரர் உள்ளிட்ட 173 பேருக்கு எதிராக முறைப்பாடு

(UDHAYAM, COLOMBO) – இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுவதாக தம்பர அமில தேரர் உள்ளிட்ட 173 பேருக்கு எதிராக, முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு அடங்கிய மனுவை பௌத்த தகவல் மையம், பொலிஸ்மா அதிபரிடம் இன்று கையளித்துள்ளது.

Read More

‘அங்கொட லொக்கா’ உள்ளிட்ட இருவரை இலங்கைக்கு கொண்டுவர முயற்சி

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவின் சென்னையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் என அறியப்படும் அங்கொட லொக்கா மற்றும் லடியா ஆகிய இருவரையும், இன்னும் சில நாட்களில் இலங்கைக்கு கொண்டுவர காவற்றுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இந்தியாவுக்குச் சென்ற நிலையில், சென்னை காவற்றுறை அதிகாரிகளால் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர். களுத்துறையில் சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தில் பிரதான சந்தேக நபர்களாக,…

Read More

பிலியந்தலை துப்பாக்கிச் சூடு – பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 7 பேர் விளக்கமறியலில்…

  (UDHAYAM, COLOMBO) – பிலியந்தலை பிரதேசத்தில் காவற்துறை மது ஒழிப்பு பிரிவினர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகத்துக்குரியவர் உள்ளிட்ட 7 பேரையும் எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் இன்று கெஸ்பேவ நீதவான் கிஹான் ரணவக முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலன்னறுவை – மெரிகல பிரதேசத்தில் வைத்து, விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று…

Read More

ரதுபஸ்வெல சம்பவம் – பிரிகேடியர் உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியில்

(UDHAYAM, COLOMBO) – கம்பஹா –  ரதுபஸ்வெல ஆர்ப்பாட்டத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்துமாறு கட்டளையிட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரிகேடியர் உள்ளிட்ட 4 பேரும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு இன்று கம்பஹா மேலதிக நீதவான் லலில் கன்னங்கர முன்னிலையில் இடம்பெற்ற போதே இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் சில உயர் இராணுவ அதிகாரிகளிடம் வாக்குமூலங்களை பெற்று வருவதாக ரகசிய காவற்துறையினர் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளனர்….

Read More