(UDHAYAM, COLOMBO) – கம்பஹா – ரதுபஸ்வெல ஆர்ப்பாட்டத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்துமாறு கட்டளையிட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரிகேடியர் உள்ளிட்ட 4 பேரும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு இன்று கம்பஹா மேலதிக நீதவான் லலில் கன்னங்கர முன்னிலையில் இடம்பெற்ற போதே இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் சில உயர் இராணுவ அதிகாரிகளிடம் வாக்குமூலங்களை பெற்று வருவதாக ரகசிய காவற்துறையினர் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளனர்.
2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வெலிவேரிய நகரில் ரதுபஸ்வெல பிரதேச மக்கள் நடாத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இதன்போது, பாடசாலை மாணவர் உட்பட மூன்று பேர் பலியானமை நினைவூட்டதக்கது.