ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக புதிய திட்டம்

(UTV|COLOMBO)-பெப்ரவரி 10ஆம் திகதியின் பின்னர், ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக புதிய தேசிய வேலைத்திட்டமொன்றை உருவாக்க உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். பொலனறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கட்சி பேதமின்றி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது. எனவே, விருப்பமுள்ளவர்கள் தம்முடன் இந்த நடவடிக்கையில் இணைய முடியும் என ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். ஊழல் மோசடிகளுக்கு எதிரான புதிய நடவடிக்கையின்றி, இந்த நாட்டை சரிசெய்ய முடியாது. குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக…

Read More

சைட்டம் நிறுவனத்திற்கு எதிராக தேங்காய் உடைப்பு!

(UDHAYAM, COLOMBO) – சைட்டம் நிறுவனம் இரத்து செய்யப்பட வேண்டுமென வேண்டுதல் முன்வைத்து,  ஹிக்கடுவை –  சீனிகம ஆலயத்தில் நேற்று தேங்காய் உடைக்கப்பட்டுள்ளது. காலி மாவட்ட பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர் சங்கத்தால் இந்த வேண்டுதல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Read More

Update -உமா ஓயா திட்டத்திற்கு எதிராக எதிர்ப்பு பேரணி

(UDHAYAM, COLOMBO) – உமா ஓயா திட்ட நிர்மாண பணி காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கோரி பண்டாரவளை நகரில் கடைகள் மூடப்பட்டு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஆர்ப்பாட்டகாரர்கள் பண்டாரவளை – ஹீல் ஓயா, பதுளை – பண்டாரவளை, பண்டாரவளை – எட்டம்பிட்டிய மற்றும் பண்டாரவளை – தியதலாவ ஆகிய பாதைகளின் ஊடாக பேரணியாக சென்று கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.   Update…

Read More

மாலிங்கவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – அனுமதியின்றி ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டமை தொடர்பில் கிரிக்கட் வீரர் லசித் மாலிங்க மீது மூவரடங்கிய குழு முன்னிலையில் ஒழுக்காற்று விசாரணையொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அறிக்கையொன்றை வௌியிட்டு அந்த நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. குறித்த மூவரடங்கிய குழுவில் , இலங்கை கிரிக்கட்டின் செயலாளர் மொஹான் த சில்வா , பிரதான நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி த சில்வா , ஒழுக்காற்று குழு தலைவர் அசேல ரூகவ உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. லசித்…

Read More

விளையாட்டு மைதானம் வெட்ட இடம் கொடுக்க மறுத்த பொகவந்தலா ஆல்டி தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்பாட்டம்

(UDHAYAM, COLOMBO) – மைதானத்திற்கு இட ஒதுக்கிடு செய்துதறுமாறு கோறி ஆல்டி தோட்டம் ஆர்பாட்டம். பொகவந்தலாவ ஆல்டி கிழ் பிரிவு தோட்டத்தில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு இடஒதுக்கிடு செய்து தருமாறு கோறி ஆல்டி கிழ்பிரிவு தோட்டமக்கள் 16.06.2017வெள்ளிகிழமை காலை 07.30 மணி முதல் 10வரை ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து இருந்தனர். தொழிலாளர் தேசிசங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் ஆல்டி கிழ்பிரிவு தோட்டத்திற்கு விளையாட்டு மiதானம் ஒன்று…

Read More

போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறிய 1900 சாரதிகளுக்கு எதிராக அபராதம்

(UDHAYAM, COLOMBO) – போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறிய ஆயிரத்து 990 சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணச்சீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. காவற்துறை தலைமையகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தண்டப்பணச்சீட்டுக்கு மேலதிகமாக போக்குவரத்து ஒழுங்கு விதிகள் தொடர்பான ஆலோசனை வகுப்புக்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் முதல் கொழும்பு நகர் மற்றும் கொழும்பு நகருக்கு நுழையும் முதன்மை வீதிகளில் போக்குவரத்து சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

Read More

நுவரெலியா தபால் அலுவலக கட்டிடத்தை விற்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்! – [photos]

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்து கட்டிட நிபுணர்களினனால் ”’குட்டி இங்கிலாந்து” என வர்ணிக்கப்படும் நுவரெலியாவிற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட அழகிய கட்டிடமே நுவரெலியாவின் பிரதான தபால் நிலையமாகும். இந்த தபால் நிலையம் 1894ஆம் ஆண்டு கட்டிட வேலைகள் நிறைவுற்று மக்களின் தேவைகளுக்காக கையளிக்கப்பட்டாதாக குறிப்புகள் சில உள்ளன. இங்கிலாந்தின் SAINSBURY WACTHAMSTO நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சுமார் 40 அடி உயரம் கொண்ட அழகிய கடிகாரம், பித்தளை மற்றும் உருக்கினால் அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யபட்ட கட்டிட மூலப்பொருட்களைக்…

Read More

கிளிவெட்டி மாஹா வித்தியாலயத்திற்கு முன்பாக பாலியல் துன்புருத்தல்களுக்கு எதிராக மாணவர்கள் கண்டன ஆர்பாட்டம்

(UDHAYAM, COLOMBO) – திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெருவெளி கிராமத்து ஆரம்ப பாடசலை மாணவிகள் மூவர் இரு இளைஞர்களினால் பாலியல் துன்புருத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக ஏற்பட்ட குழப்பநிலையை தொடர்ந்து அவ்விரு இளைஞர்களும் அக்கிராம மக்களினால் தாக்குதல்களுக்கு உள்ளாகி சிறைபிடிக்கப்பட்டு பின்பு மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மாணவிகள் மூவரையும் மூதூர் தள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குற்றவாளிகளை கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்தக்கோரியும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரியும் கிளிவெட்டி மஹாவித்தியாலய…

Read More

ஐக்கியத்தை சீர்குலைக்க முயற்சிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – அரசியல் நோக்கங்களுக்காக இன ஐக்கியத்தை சீர்குலைப்பதற்கு முயற்சிப்போருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு பொலிசாருக்கு உண்டு என்று சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்காக தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று சபை ஒத்திவைப்பு வேளையில் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். சட்டம் அனைவருக்கும் நியாயமானதாக இருக்க வேண்டும். நாட்டில் ஐக்கியம் பலப்படுத்தப்பட்டு வரும் சந்தர்ப்பத்தில் அதனை பலவீனமாக்குவதற்கு இடமளிக்க முடியாதென்றும் அமைச்சர் சாகல ரத்னாயக்க வலியுறுத்தினார்….

Read More

இனவாத குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் – உனா மெக்கோலி

(UDHAYAM, COLOMBO) – இனவாத குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி உனா மெக்கோலி வலியுறுத்தியுறுத்தலை விடுத்துள்ளார். இனரீதியான வன்முறைகளைத் தூண்டும் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள அவர், கடந்த வாரத்தில் விசாகப்பூரணையை கொண்டாடியவர்கள் இந்த வாரம் புத்தரின் போதனைகளை மறந்துள்ளதாக குறிப்பிட்டார். இந்த நிலையில் இவ்வாறான வன்முறைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Read More