Update -உமா ஓயா திட்டத்திற்கு எதிராக எதிர்ப்பு பேரணி

(UDHAYAM, COLOMBO) – உமா ஓயா திட்ட நிர்மாண பணி காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கோரி பண்டாரவளை நகரில் கடைகள் மூடப்பட்டு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆர்ப்பாட்டகாரர்கள் பண்டாரவளை – ஹீல் ஓயா, பதுளை – பண்டாரவளை, பண்டாரவளை – எட்டம்பிட்டிய மற்றும் பண்டாரவளை – தியதலாவ ஆகிய பாதைகளின் ஊடாக பேரணியாக சென்று கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 

Update :- Wednesday, June 28, 2017 10.11am

————————————————————-

உமா ஓயா திட்ட நிர்மாண பணி காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கோரி பண்டாரவளை நகரில் கடைகள் மூடப்பட்டு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் அகழ்வு காரணமாக தமது வீடுகளில் பிளவுகள் மற்றும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உமா ஓயா திட்டத்தின் நிர்மாண பணிகள் 2009 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *