எதிர்கால நன்மை கருதியே பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனை தடைசெய்யப்பட்டுள்ளது
(UTV|COLOMBO)-சுற்றாடல் தினத்தில் மாத்திரமன்றி வருடம் முழுவதும் செயற்படுத்தப்படும் சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்துடன் இணைந்து சுற்றாடலை பாதுகாப்பதற்கான தமது பொறுப்பினை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். வரலாற்று சிறப்புமிக்க கேகாலை நகரிலிருந்து ஜனாதிபதி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.இதனை தனியொரு தரப்பினருக்கு மாத்திரம் கையளிக்கமுடியாது என்பதுடன், அரசியல்வாதிகள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களும் இதன்பொருட்டு ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார். கேகாலை நகரில் நேற்று முற்பகல் இடம்பெற்ற சர்வதேச சுற்றாடல் தின கொண்டாட்டத்தில்…