எந்தவொரு விசாரணைக்கும் முகங்கொடுக்கத் தயார் – இராணுவ தளபதி

(UDHAYAM, COLOMBO) – “இலங்கை இராணுவம் எந்தவொரு போர்க்குற்றங்களிலும் ஈடுபடவில்லை” என, புதிய இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், எந்தவொரு விசாரணைக்கும் முகங்கொடுக்கத் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் 22 ஆவது இராணுவத் தளபதியாக பொறுப்புக்களை ஏற்கும் நிகழ்வு, இராணுவ தலைமையகத்தில் இன்று இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவம் சட்டத்தை மதிக்கும் இராணுவமாகும். தண்டனை சட்டம் மற்றும் இராணுவ சட்டம் என இரண்டுக்கும் இராணுவம் உட்பட்டுள்ளது….

Read More

நாட்டுக்கு பாதகமான எந்தவொரு உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடப்படமாட்டாது – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – நாட்டுக்கு எந்தளவு பொருளாதார நலன்களைக் கொண்டுவந்தாலும் நாட்டுக்கு பாதகமான பொருத்தமற்ற எந்தவொரு முதலீட்டு, வர்த்தக உடன்படிக்கைகளிலும் எந்தவொரு நாட்டுடனும் கையொப்பம் இடப்படமாட்டாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற சக்திவலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவலு அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின் நீண்டகால மின்னுற்பத்தி திட்டம் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், நாட்டின் மின்னுற்பத்தியின்போது சுற்றாடல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கி பொருளாதாரத்தைப்…

Read More

எந்தவொரு சவாலையும், தேர்தலையும் வெற்றி கொள்ளும் ஆற்றல் ஐக்கியதேசியக் கட்சிக்கு உண்டு – பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – எந்தவொரு சவாலையும், தேர்தலையும் வெற்றி கொள்ளும் ஆற்றல் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். முன்னைய வருடத்தை விட இம்முறை கூடுதலான மக்கள் ஜக்கியதேசியக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் இந்த மக்கள் வெள்ளத்தை அவதானிக்கும்போது எந்தவொரு தேர்தலையும் சவாலையும் வெற்றி கொள்ளக்கூடிய ஆற்றல் ஐக்கிய தேசியக் கட்சிக்கு உண்டு என்று பிரதமர் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

Read More