அரசாங்கத்தின் முறையான அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்துவதற்கு அனைத்து அரசியல்வாதிகளினதும் ஒத்துழைப்பு தேவை – ஜனாதிபதி
(UDHAYAM, COLOMBO) – அரசியல்வாதிகள் அபிவிருத்திக்கு பதிலாக விருப்பு வாக்குகளை எதிர்பார்த்து செயற்படுவதனாலேயே வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற அனர்த்தங்களுக்கு மக்கள் முகங்கொடுக்க வேண்டியிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். அபிவிருத்தி செயற்பாடுகளின் போது அரசாங்கம் விதந்துரைக்கும் திட்டங்களை அமுல்படுத்த இடமளிக்காமல் அடுத்த தேர்தலுக்காக மக்களை வெற்றி கொள்வதற்கு சில அரசியல்வாதிகள் செயற்படுவதன் காரணமாக இவ்வாறான அழிவுகளுக்கு மக்கள் முகங்கொடுக்க வேண்டியிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இவ்வாறான கசப்பான அனுபவங்களுக்கு பின்னராவது மக்களுக்கு உண்மை நிலையைப் புரிய வைத்து அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை…