60 அடி பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து 6 வயது சிறுவன் பலி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயம் கினிகத்தேனையில் சோகம்
(UDHAYAM, COLOMBO) – ஹெலியகொட மண்சரிவில் உயிரிழந்தவரின் ஏழாம் நாள் கிரிகைக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்களின் கார் 60 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 6 வயது சிறுவன் பலியானதுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் கொழும்பு ஹட்டன் பிரதான வீதியின் கினிகத்தேன நகரை அன்மித்த பகுதியிலே 01.06.2017 அதிகாலை 1.30 மணியளவில் இவ் விபத்து சம்பவித்துள்ளது கினிகத்தேனை அம்பகமுவ சிங்கள வித்தியாலயத்தில் தரம் 1 கல்வி பயிலும் பத்தின் தேவேந்திர பண்டார சேனாரத்ன…