60 அடி பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து 6 வயது சிறுவன் பலி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயம் கினிகத்தேனையில் சோகம்

(UDHAYAM, COLOMBO) – ஹெலியகொட மண்சரிவில் உயிரிழந்தவரின் ஏழாம் நாள் கிரிகைக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்களின் கார் 60 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 6 வயது சிறுவன் பலியானதுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கொழும்பு ஹட்டன் பிரதான வீதியின் கினிகத்தேன நகரை அன்மித்த பகுதியிலே 01.06.2017 அதிகாலை 1.30 மணியளவில் இவ் விபத்து சம்பவித்துள்ளது

கினிகத்தேனை அம்பகமுவ சிங்கள வித்தியாலயத்தில் தரம் 1 கல்வி பயிலும் பத்தின் தேவேந்திர பண்டார சேனாரத்ன என்ற சிறுவனே ஸ்தலித்தில் பலியனார்

காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த குறித்த சிறுவனின் தாய் தந்தை மற்றும் பாட்டி ஆகியோர் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்

காயமுற்ற பாட்டி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பிரதேச செயலகத்தில் பனியாற்றிய  தாய் தந்தை ஆகியோர் கினிகத்தேன வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பலியான சிறுவனின் சடலம் பிரேத பரிசோதணைக்கு நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் மேலதிக விசாரணைகளை கினிகத்தேன பொலிஸார் மேற்கொள்கின்றனர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/p.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/ph.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/pho.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/photo.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/photo11.jpg”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *