சர்வதேச கண்காணிப்பாளர்களை கண்டித்துள்ள துருக்கி ஜனாதிபதி
(UDHAYAM, COLOMBO) – துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தாயிப் எர்டோகன் சர்வதேச கண்காணிப்பாளர்கள் தொடர்பில் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். துருக்கியின் ஜனாதிபதி பதவிக்கு அதிக அதிகாரம் வழங்கும் வகையிலான சட்டத்திருத்தத்துக்கான கருத்துக் கணிப்பு கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற நிலையில், அதில் அவர் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் இந்த கருத்துக் கணிப்பு சமநிலையற்ற வகையில் அமைந்ததாக சர்வதேச கண்காணிப்பாளர்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இதனை ஜனாதிபதி எர்டோகன் கண்டித்துள்ளார்.