விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் – பரீட்சைத்திணைக்களம்
(UTV|COLOMBO)-கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்காக நாடளாவிய ரீதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜீத தெரிவித்துள்ளார். கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்காக இம்முறை விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துதவற்கு பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பரீட்சை மத்திய நிலையங்களில் முறைகேடுகள் இடம்பெறுவதற்கு அனுமதியளிக்க போவதில்லை என்று பரீட்சை ஆணையாளர் குறிப்பிட்டார். பரீட்சை மேற்பார்வையாளர்களின் வசதி கருதி, இம்முறை பரீட்சை நடைபெறும் வகுப்புகளில் 20 மாணவர்களுக்கு மாத்திரமே…