விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் – பரீட்சைத்திணைக்களம்

(UTV|COLOMBO)-கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்காக நாடளாவிய ரீதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜீத தெரிவித்துள்ளார்.

கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்காக இம்முறை விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துதவற்கு பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பரீட்சை மத்திய நிலையங்களில் முறைகேடுகள் இடம்பெறுவதற்கு அனுமதியளிக்க போவதில்லை என்று பரீட்சை ஆணையாளர் குறிப்பிட்டார்.

பரீட்சை மேற்பார்வையாளர்களின் வசதி கருதி, இம்முறை பரீட்சை நடைபெறும் வகுப்புகளில் 20 மாணவர்களுக்கு மாத்திரமே இட ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் .

கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் 21 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளது. இம்முறை பரீட்சையில் 6 இலட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH                    கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv  என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *