மாகாண மட்டத்தில் கல்வி சார்ந்த போட்டியை உருவாக்க வேண்டும் – பிரதமர்
(UDHAYAM, COLOMBO) – மாகாண மட்டத்தில் கல்வி சார்ந்த போட்டியை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கல்வியை அரசியல் மயப்படுத்தாது முன்னெடுத்துச் செல்வது அரசாங்கத்தின் நோக்கமென்றும் பிரதமர் கூறினார்;. பலப்பிட்டி சித்தார்த்த மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் , இவ்வாறான போட்டியின் மூலம் ஏனைய மாகாணங்கள் கொழும்பு நகருடன் போட்டியிடும் நிலைமை உருவாகுமென்றும்; குறிப்பிட்டார். பிரதமர் அங்கு தொடாந்து உரையாற்றுகையில் : அரசில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும்…