களுத்துறையில் மண் சரிவு

(UDHAYAM, COLOMBO) –     மாத்தறை -தெனியாய – மொரவக்க கந்தையில் நேற்று இரவு மண் சரிவு ஏற்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்திற்கு பயணிக்கும் சகல வீதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, இரத்தினபுரி ,கேகாலை, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் மண் சரிவு அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை –  புலத்சிங்கள – போகஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவின் காரணமாக நபர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, சப்புகஸ்கந்த – ஹெய்யந்துடுவ  பகுதியில்…

Read More

களுத்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி: மேலும் இருவர் காயம்

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை – வெலிபன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். இதில் மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளவர், கொஸ்கொட பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவர் என காவற்துறை தெரிவித்துள்ளது. கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. சம்பவம் தொடர்பான சந்தேக நபர்களை இனங்கண்டு அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை வெலிபன்ன காவற்துறை முன்னெடுத்துள்ளது.

Read More