கிழக்கு மாகாண ஆளுநர் உத்தியோகபூர்வமாக பதவியேற்பு

(UDHAYAM, COLOMBO) – கிழக்கு மாகாண புதிய ஆளுநராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட முன்னாள் வெளிநாட்டு அமைச்சரும் சட்டத்தரணியுமான ரோஹித போகல்லாகம தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்ற அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கிழக்கு மாகாண ஆளுநராக தம்மை தெரிவு செய்தமைக்கு நன்றி தெரிவித்தார். ஜனாதிபதியினுடைய நோக்கங்களான அர்த்தமுள்ள நல்லிணக்கம், வளமான நாட்டை கட்டியெழுப்புதல் ஆகிய விடயங்களை கருத்திற்கொண்டு கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்ப அனைவருடைய…

Read More

மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கையர்களின் வருமானம் சரிவு

(UDHAYAM, COLOMBO) – மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கையர்களின் வருமான வீதம் குறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நிலவுகின்ற பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகள், இலங்கை பணியாளர்களின் வேதனத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் 15 சதவீதமாக வருமானம் குறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Read More

கிழக்கு முதலமைச்சர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் ஆகியோருக்கிடையில் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) -கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்  மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் அப்துல் ஹமீட் அப்துல் பத்தாஹ் காஸிம் அல் முல்லாஹ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. நேற்று பிற்பகல் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதரகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன இதற்போது இலங்கையில் முஸ்லிங்கள் எதிர்நோக்கி வரும் அச்ச நிலைமை தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் இதன் போது  ஐக்கிய அரபு  இராச்சியத்…

Read More

கிழக்கு, வவுனியா, ஊவா மாவட்டங்களில் மழை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடன் கூடிய காலநிலை தொடரக்கூடும் . வளிமண்டலவியல் திணைக்களம் இன்று நண்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு ,சப்ரகமுவ ,தெற்கு, மத்தி மற்றும் வடமேல் மாகாணங்களில் இக்காலப்பகுதியில் மழை பெய்யக்கூடும். கொழும்பு ,களுத்துறை ,கம்பஹா, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா மாவட்டத்திலும் பிற்பகலுக்கு பின்னர் பெய்யக்கூடும் ….

Read More

நாட்டில் தலைதூக்கிவரும் இனவாத செயற்பாடுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தார் கிழக்கு முதலமைச்சர்

(UDHAYAM, COLOMBO) – ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. திருகோணமலையில் உள்ள கிழக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில்  கெராட் ரான் லேனட் (GERHARD RAN”T LAND)  தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு பங்கேற்றது. இதன் போது கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ் தண்டாயுதபானி,கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்…

Read More

கிழக்கின் தொண்டராசிரியர்களுக்கான தீர்வு துரிதப்படுத்தப்பட வேண்டும் – பிரதமரிடம் கிழக்கு முதல்வர் கோரிக்கை

(UDHAYAM, COLOMBO) – கிழக்கு மாகாணத்திலுள்ள தொண்டராசிரியர்களுக்கான தீர்வு துரிதப்படுத்தப்பட வேண்டும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஷீர் அஹமட் கோரிக்கை விடுத்துள்ளார். அலரிமாளிகையில் இன்று பிரதமரை சந்தித்தபோதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தள்ளார். கிழக்கு மாகாணத்தில் உள்ள 445 தொண்டராசியர்களுக்கும் உடன் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார். இதையடுத்து தொண்டராசியர்களுக்கு தீர்வினை வழங்கும் நடவடிக்கையில் கல்வியமைச்சையும் இணைத்துக்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கிழக்கு முதலமைச்சருக்கு பிரதமர் அறிவுறுத்தல்…

Read More

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று நிர்வாக முடக்கல் போராட்டம்

(UDHAYAM, COLOMBO) – வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோர், காணி விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறுப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இந்த நிர்வாக முடக்கல் போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் முழுமையான நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக எமது பிராந்திய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கிளிநொச்சியிலும் இந்த நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதேவேளை, முல்லைத்தீவில் மேற்கொள்ளப்படும் நிர்வாக முடக்கல் போராட்டத்தின் இடைநடுவே கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்படவுள்ளதாக அங்கிருக்கும்…

Read More

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக கற்றல் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

(UDHAYAM, COLOMBO) – கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக கற்றல் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. கிழக்கு பல்கலைகழக திருகோணமலை வளாகத்தில் நேற்று பரீட்சை நடைபெறுவதாக இருந்தது. ஏற்கனவே பல்கலைக்கழகத்தினுள் ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக இடைநிறுத்தப்பட்ட 16 மாணவர்களை பரீட்சைக்கு தோற்ற நிர்வாகம் தடை விதித்திருந்தது. ஆனாலும் அவர்களையும் பரீட்சைக்கு உள்வாங்கக்கோரி மாணவர்களின் அநேகமானோர் பரீட்சையை பகிஷ்கரித்து இருந்தனர். ஆனாலும் புதிய 13 மாணவர்கள் மற்றும் பரீட்சையை முழுமையாக நிறைவு செய்யாத 4 மாணவர்கள் உட்பட…

Read More