கிராமப்புற வைத்தியசாலைகளில் டெங்கு சிகிச்சை குழு

(UDHAYAM, COLOMBO) – டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக விசேட வைத்தியக்குழு அனைத்து கிராமப்புற வைத்தியசாலைகளிலும் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வைத்தியசாலைகளில் நிலவும் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பினை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதகாக சுகாதார அமைச்சின் விசேட வைத்தியர் அமல் அரசடி சில்வா தெரிவித்தார். டெங்கு நோயாளர்களை விரைவாக அடையாளம் காண்பதற்காக அனைத்து வைத்திய சாலைகளிலும் வெளிநோயாளர்பிரிவில் இரத்த பரிசோதனை செய்வதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர் குறுகிய நேரத்திற்குள் இது தொடர்பான…

Read More

அமைச்சரவைக் குழு இன்று உமா ஓயா பிரதேசத்திற்கு விசேட மேற்பார்வை விஜயம்

(UDHAYAM, COLOMBO) – உமா-ஒயா செயற்றிட்டம் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு இன்று உமா ஒயா செயற்றிட்ட வளாகத்திற்கு விசேட மேற்பார்வை விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது. சில வீடுகளின் கூரைகளிலிருந்து நீர் கசியும் நிலை குறித்து இந்த உபகுழு விசேட ஆய்வுகளை மேற்கொள்ளும். இதற்கு மேலதிகமாக இந்த செயற்றிட்டத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் பயிர்ச்செய்கை நிலங்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளும். வீட்டுக்கூரை மற்றும் கால்வாய்களுக்கு ஊடாக வீடுகளுக்கு நீர் கசியும் நிலை குறித்து வீட்டு உரிமையாளர்களுடன்…

Read More

தென்னாபிரிக்க பிரதிநிதிகள் குழு – அமைச்சர் மனோகணேசன் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு மற்றும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. அமைச்சில் இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் நம் நாட்டின் தற்போதைய காலகட்டத்திலே நிலவுகின்ற நல்லிணக்கத்தையும், அதை மேம்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சின் செயலாளர் ரஞ்சித் உயன்கொட, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் பிரியானீ குணரத்ன, தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத் தலைவர்…

Read More

சைட்டம் தொடர்பாக முக்கிய தகவலை வௌியிட்ட கோப் குழு

(UDHAYAM, COLOMBO) – மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை பல்கலைக்கழகமாக ஏற்றுக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவிப்புகள் எவையும் வெளியாக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கோப் குழு எனப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக் குழு நேற்று கூடிய போது, இந்த விடயம் வெளிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்தக் குழுவின் உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார். கோப் குழுவானது, நேற்றையதினம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னாள் இந்நாள் அதிகாரிகளையும், உயர் கல்வி அமைச்சின் முன்னாள் இந்நாள் அதிகாரிகளையும் அழைத்து…

Read More