தென்னாபிரிக்க பிரதிநிதிகள் குழு – அமைச்சர் மனோகணேசன் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு மற்றும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.

அமைச்சில் இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் நம் நாட்டின் தற்போதைய காலகட்டத்திலே நிலவுகின்ற நல்லிணக்கத்தையும், அதை மேம்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சின் செயலாளர் ரஞ்சித் உயன்கொட, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் பிரியானீ குணரத்ன, தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத் தலைவர் சந்தன அருணதேவ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *