கொழும்பின் சில பகுதிகளில் 15 மணி நேர நீர்வெட்டு

(UTV|கொழும்பு)- கொழும்பின் சில பகுதிகளில் நாளை(14) காலை 9 மணி முதல் 15 மணித்தியால நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கொழும்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ், நீர்க்குழாய் திட்டத்தை விரிவாக்கும் நடவடிக்கைகளினால் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு 2, 3, 7, 8 மற்றும் 10 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதுடன், காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையான குறித்த…

Read More

கொழும்பு, பண்டாரநாயக்க மாவத்தையில் சுமார் 1010 பேர் தனிமைப்படுத்தலுக்கு

(UTV|கொழும்பு) – கொழும்பு, பண்டாரநாயக்க மாவத்தையில் சுமார் 242 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1010 பேர் இராணுவ தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Read More

கொழும்பு, கம்பஹா, குருனாகல் மாவட்டங்களில் தொடர்ந்தும் டெங்கு அபாயம்

(UTV|COLOMBO)-கொழும்பு, கம்பஹா மற்றும் குருனாகல் மாவட்டங்களில் தொடர்ந்தும் டெங்கு அபாயம் நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் ஏனைய மாவட்டங்களில் டெங்கு அபாயம் இல்லையென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 15,534 டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 2,000 இற்கும் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 12 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது….

Read More

கொழும்பு நோக்கி வருவோருக்கு முக்கிய அறிவித்தல்

(UTV|COLOMBO)-சுதந்தர தின கொண்டாட்ட ஒத்திகை நடவடிக்கை காரணமாக கொழும்பை சுற்றியுள்ள வீதிகளில் இன்றும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொம்பனித்தெரு , கொள்ளுபிட்டிய உள்ளிட்ட கொழும்பை நோக்கிய பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. நேற்று தொடக்கம் எதிர்வரும் 3ம் திகதி வரை காலி முகத்திடல் சுற்றுவட்டம் தொடக்கம் பழைய நாடாளுமன்ற சுற்றுவட்டம் இடையிலான பகுதி காலை ஏழு மணி முதல் மதியம் 12 மணி வரை மூடப்படவுள்ளதாக காவற்துறையினர் நேற்று அறிவித்தனர்….

Read More

கொழும்பு கோட்டையிலிருந்து நீராவிப்புகையிரதம்

(UTV|COLOMBO)-கொழும்பு கோட்டையிலிருந்து பண்டாரவளை வரையில் நீராவிப் புகையிரதமொன்று சமீபத்தில் தனது பயணத்தை ஆரம்பித்தது. இந்த ரயில் கடந்த 30ஆம் திகதி பிற்பகல் ஹற்றன் ரயில் நிலையத்தை சென்றடைந்தது. கொழும்பு கோட்டையிலிருந்து 29ஆம் திகதி தனது பயணத்தை ஆரம்பித்த நீராவி புகையிரதம் அன்று இரவு கண்டி ரயில் நிலையத்தை சென்றடைந்தது. இது கண்டியிலிருந்து 30ஆம் திகதி அதிகாலை புறப்பட்டு நானுஓயாவரையில் பயணித்துள்ளது. இந்த பயணத்தின் போது நீராவி புகையிரதம் ஹற்றன் ரயில் நிலையத்திலும் நானு ஓயாவிலும் நீரை நிரப்பிக்கொண்டது….

Read More

கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது

(UTV|COLOMBO)-கொழும்பு லோட்டஸ் வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அங்கவீனமுற்றுள்ள இராணுவ வீரர்களின் மனைவிமார் இணைந்து அப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால் அந்த வீதி மூடப்பட்டுள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]            

Read More

கொழும்பு நகரில் யாசகத்தில் ஈடுபடும் செயற்பாடு ஜனவரி முதலாம் திகதி முதல் தடை

(UTV|COLOMBO)-கொழும்பு நகரில் தொழிலாக யாசகத்தில் ஈடுபடும் செயற்பாடு எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் தடை செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு நகரில் 600க்கும் அதிகமானவர்கள் எந்தவித செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது யாசகத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களை  உரிய புனருத்தாபன நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள். தொழிலாக யாசகத்தில் ஈடுபடுவோர் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அந்த தொழிலை கைவிடுமாறு அவர் கோரிக்கை…

Read More

கொழும்பு கோட்டை – தலைமன்னார் தொடரூந்து சேவைகள் இன்று முதல் மட்டு!

(UDHAYAM, COLOMBO) – கொழும்பு கோட்டையில் இருந்து தலைமன்னார் வரையிலான தொடரூந்து சேவைகள் இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய குறித்த சேவைகள் மதவாச்சி வரையில் மாத்திரமே இடம்பெறும் என தொடரூந்து கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த தொடரூந்து வீதியில் மதவாச்சி மற்றும் செட்டிக்குளத்திற்கு இடையில் மேற்கொள்ளப்படும் திருத்தப்பணிகளின் நிமிர்த்தமே இவ்வாறு தொடரூந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

Read More

கொழும்பு தேசிய மருத்துவமனையில் டெங்கு நோயாளர்களை அனுமதிக்க வாய்ப்பு

(UDHAYAM, COLOMBO) – டெங்கு நோயாளர்களால் சிக்கல் ஏக்கல் ஏற்பட்டுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்க முடியாத நோயாளர்களை கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்க முடியும் என அந்த மருத்துவமனையின் இயக்குனர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். டெங்கு நோயார்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள புதிய சிகிச்சை அறை காரணமாக நோயாளர்களர்களின் சிகிச்சைக்கான வசதி அங்கு காணப்படுவதாக எமது செய்தி பிரிவுக்கு கருத்து தெரிவிக்கம் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். டெங்கு நோய் தொடர்பான பிரதேசங்களின் தரவு அறிக்கைகளை தினம்தோறும் பிரதேச மற்றும் மாகாண…

Read More

கொழும்பு பிரதேச குப்பைகள் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கு பிரதமர் நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – கொழும்பு புறக்கோட்டை பிரதேசங்களில் குப்பைகள் தேவையற்ற விதத்தில் குவிக்கப்பட்டதன் காரணமாக எதிர்நோக்கப்பட்டுள்ள பிரச்சினை குறித்த விடயங்களை கண்டறிவதற்காக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க  அப்பிரதேசத்திற்கு விஜயம் செய்தார். பிரதமருடன் நேற்று காலை பிரதமர் அலுவலக பணியாளர் சபையின் தலைமை அதிகாரியும் , சட்ட  ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்கவும் சென்றிருந்தார். போதிராஜ மாவத்தை மற்றும் இலங்கை போக்குவரத்துசபை பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகாமையிலும் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளை பிரதமர் பார்வையிட்டார்….

Read More