சட்டம் தன் கடமையை செய்யும்

(UTV|COLOMBO)-போதை குளிசைகளை வைத்திருக்க உதவியளித்த நீதிமன்றத்தில் கடமைபுரியும் நபர் ஒருவரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 கோடியே 26 இலட்சம் ரூபாய் பெறுமதியான 7564 போதை குளிசைகளை வைத்திருக்க குறித்த நபர் உதவியளித்துள்ளார். இந்நிலையில் குறித்த நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.    …

Read More

யாழில் தகவல் அறியும் சட்டம் தொடர்பான செயலமர்வு நாளை

(UDHAYAM, COLOMBO) – தகவல் அறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக வடமாகாண சபை பிரதம செயலாளர் ,மாவட்ட செயலாளர்கள் ,அமைச்சு மற்றும் திணைக்களத்தின் தலைமை அதிகாரிகள் பிரதேச செயலாளர்களுக்கான செயலமர்வொன்று நாளை (07)  நடைபெறவுள்ளது. நிதி மற்றும் ஊடத்துறை அமைச்சும், அரசாங்க தகவல் திணைக்களமும் இணைந்து ஏற்பாடுசெய்துள்ள இந்த செயலமர்வுக்கு அமைவாக வடமாகாண ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வும் நாளை இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள கிறீன் கிறாஸ் ( Green Grass  Hotel,Asservatham Lane, Jaffna ) ஹோட்டலில் நாளை…

Read More

உத்தேச கணக்காய்வாளர் சட்டம் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை

(UDHAYAM, COLOMBO) – உத்தேச கணக்காய்வாளர் சட்டம் தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்தி அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது, உத்தேச கணக்காய்வாளர் சட்டம் தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்தல் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பொதுமக்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்ட கொள்கைப்பிரகடனத்தின் மூலம் சுட்டிக்காட்டியவகையில் தேசிய கணக்காய்வு சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது. இதற்கமைவாக மதிப்பீட்டுக்குழுவின் மூலம் அடிப்படை திருத்தசட்டமூலம்…

Read More

இனவாத ரீதியான செயற்பாடுகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் அவசியமற்றது – மகிந்த ராஜபக்ஷ

(UDHAYAM, COLOMBO) – இனவாத ரீதியான செயற்பாடுகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் அவசியமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றை  அமுலாக்க முயற்சிப்பதாக கூறப்படுகிற நிலையிலேயே மகிந்த இதனை தெரிவித்துள்ளார். தற்போது நடைமுறையில் இருக்கின்ற சட்டங்களுக்கு அமைய காவற்துறையினருக்கு அதனை கட்டுப்படுத்தும் அதிகாரம் உள்ளது. இனவாத செயல்களை கட்டுப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திடம் இல்லாமை காரணமாகவே, தமது அணியினர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது எனவும் மகிந்த…

Read More

மத நல்லிணக்கத்தை பாதுகாக்க புதிய சட்டம்?

(UDHAYAM, COLOMBO) – வை ஏற்படின் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று அலரி மாளிகையில் விஷேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு மதத்திற்கோ அல்லது மக்களுக்ககோ எதிராக வன்முறையை பயன்படுத்தும் தரப்பினருக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள நேற்று அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர், அது குறித்த ஆலோசனைகளை காவற்துறைக்கு வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

தகவல் அறியும் சட்டம் தொடர்பாக முப்படை வீரர்களுக்கு விளக்கம்

(UDHAYAM, COLOMBO) – தகவல் அறியும் சட்டம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் முக்கியஸ்தர்கள் மற்றும் சிரேஸ்ட அதிகாரிகளை தெளிவுபடுத்தும் விசேட செயலமர்வு பாதுகாப்பு அமைச்சில் இன்று காலை இடம்பெற்றது. 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி நிறைவேற்றப்பட்ட 2016ம் ஆண்டு இலக்கம் 12 தகவல்களை அறியும் சட்டம் (RTI No 12 of 2016) தொடர்பாக அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய , தேசிய ஊடக கேந்திர நிலையத்தின் பணிப்பாளர்…

Read More

மின்சார விநியோக கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்கள் நிர்மாணிப்பது தொடர்பில் புதிய சட்டம்

(UDHAYAM, COLOMBO) – மின்சார விநியோக கம்பிகளுக்கு அருகில் பாதுகாப்பற்ற கட்டிடங்களை நிர்மாணிப்பதை தவிர்க்க புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, மின்சார விநியோக கம்பி மற்றும் கட்டிடங்களுக்கு இடையாலன குறைந்தபட்ச இடைவெளி தொடர்பில் புதிய ஒழுங்குவிதி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 1000 வோல்ட் மின்சாரத்தை விநியோகிக்கும்க ம்பிகளுக்கும், கட்டிடங்களுக்கும் இடையில் குறைந்தது 2.4 மீற்றர் இடைவெளி காணப்பட வேண்டும். அத்துடன், அதிக வோல்ட் மின்சாரத்தை விநியோகிக்கும் மின்சார கம்பிகளுக்கும், கட்டிங்களுக்கும் இடையில் அதிக…

Read More