வெளிநாட்டு நிதியுதவி சர்வதேச ரீதியில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள சமிக்ஞை
(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தத்தின் போது கிடைக்கப்பெற்ற வெளிநாட்டு நிதியுதவி சர்வதேச ரீதியில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள சமிக்ஞையாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார். இந்த உதவிகளை மேலும் பெற்றுக்கொள்ளும் வகையில் சமகால அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் நேற்று பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு, கிழக்கில் கடும் வறட்சி நிலவுகிறது. அரசாங்கம் இது விடயத்தில் கவனம் செலுத்துவதுடன், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம்…