சவுதி அரேபிய இளவரசருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – சவுதி அரேபிய இளவரசர் அப்துல் அஸீஸ் அல் சௌத் இன்று  முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் தனது பாராட்டுக்களைத் தெரிவித்த இளவரசர் அப்துல் அஸீஸ் அல் சௌத் இலங்கையின் வர்த்தக, சுற்றுலா துறைகளிலுள்ள முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் முன்னுரிமை கொடுத்து கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார். சர்வதேச ரீதியில் உயர்ந்தளவு முதலீட்டை மேற்கொள்ளும் சவுதி முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களை எதிர்காலத்தில் இலங்கையின் முதலீட்டு வாய்ப்புகளில் கவனம் செலுத்த …

Read More

மேலும் கால அவகாசம் வழங்கியுள்ள சவுதி

(UDHAYAM, COLOMBO) – சவுதியில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான பொதுமன்னிப்பு காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனை இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி இந்த மாதம் 23ஆம் திகதி வரையில் இந்த கால அவகாசம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் அங்கு வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள், இந்த மாதம் 23ஆம் திகதிக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More

சவுதி உட்பட 4 நாடுகள் , கட்டாருடன் அனைத்து தொடர்புகளையும் துண்டித்தன

(UDHAYAM, COLOMBO) – சவுதி அரேபியா, எகிப்து , ஐக்கிய இராச்சியம் மற்றும் பாரெய்ன் ஆகிய நாடுகள் , கட்டார் நாட்டுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளன. கட்டார் தீவிரவாதத்துக்கு துணை போவதாக கூறியே இம்முடிவை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரானுடன், கட்டார் நெருங்கிய தொடர்ப்பைப் பேணுவதாக அந்நாடுகள் அறிவித்துள்ளன. கட்டாருடனான போக்குவரத்தையும் துண்டிப்பதாகவும் இனிமேல் , கட்டார் நாட்டவர்கள் மேற்படி நாடுகளில் இருந்து வெளியேறவும் இரண்டு கிழமை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பானது மத்தியகிழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

Read More

சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியிருந்த 2 ஆயிரம் பேர் தஞ்சம்

(UDHAYAM, COLOMBO) – சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியிருந்த 2 ஆயிரம் பேர் சவுதியில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களை பொதுமன்னிப்பு அடிப்படையில் தண்டனை இன்றி வெளியேற மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன்படி, தஞ்சம் புகுந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார். இவ்வாறு தஞ்சமடைந்தவர்களில் அறுபது சதவீதமானவர்கள் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது…

Read More