தேசிய கல்வியற் கல்லூரி – 4,286 பேருக்கு ஆசிரியர் நியமனம்

(UTVNEWS|COLOMBO) – தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர் நியமனங்கள் 4,286 பேருக்கு வழங்கப்படவுள்ளன.

இது தொடர்பான நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் எதிர்வரும் 8 ஆம் காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

19 தேசிய கல்வியியற் கல்லூரிகளில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 31 கற்கை நெறிகளை பயின்ற இவர்கள் தேசிய கல்வியற் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர் என்று அடையாளப்படுத்தப்படுவர்.

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் நோக்கில் இவர்களுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சர், சட்டத்தரணி அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *