சீன நாட்டு பெண் ஒருவரின் பணம் கொள்ளை ; 2 பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – வெள்ளவத்தை பிரதேசத்தில் சீன நாட்டு பெண் ஒருவரின் ஒரு கோடி 54 லட்சம் ரூபாய் பணத்தினை கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண் நேற்றைய தினம் கோட்டை பிரதேசத்தில் இருந்து வெள்ளவத்தை நோக்கி பயணிக்க முற்பட்டுள்ள நிலையில் சில நபர்களினால் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் கம்பஹா காவற்துறையில் உத்தியோகஸ்தராக பணி புரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்களை கைது செய்வதற்கான…

Read More

நிவாரணப் பொருட்களுடன் வருகை தந்த சீன கப்பல்கள் நாடு திரும்பின

(UDHAYAM, COLOMBO) – வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகளுக்கு உதவியளிக்கும் வகையில் நிவாரணப் பொருட்களுடன் இலங்கைக்கு வருகை தந்த சீனக்கப்பல்கள் நாடு திரும்பின. கடந்தமாதம் 31ம் திகதி வருகை தந்த சீன இராணுவ கடற்படைக்குச் சொந்தமான ‘Chang Chun”, “Jing Zhou” மற்றும் “Chao Hu ஆகிய கப்பல்கள் நேற்று முன்தினம் நாடு திரும்பின. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக 10 சிறிய படகுகள் மற்றும் ஐந்து மருத்துவ குழுக்களுடன் குறித்த கப்பல்களில் வருகை தந்த…

Read More

இலங்கையின் அபிவிருத்திக்கு உதவுவதாக சீன ஜனாதிபதி உறுதி

(UDHAYAM, COLOMBO) – இலங்கையின் அபிவிருத்திக்கு உதவுவதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்க்பிங்க்  உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீஜிங்கில் நடைபெற்ற “ஒரே பாதை ஒரு இலக்கு” என்ற சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்ததாக ஆங்கில ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது. சிறிய தீவான இலங்கை, துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை சேவையில் முக்கியத்துவமிக்கது என சீன ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். சீனாவில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான இந்த வட்டமேசை மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட…

Read More

பிரதமர் – சீன ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெறும் ஒரே கரையோரம் – ஓரே பாதை என்ற மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றுள்ள பிரதமர் ரணில்     அந்நாட்டின் ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது திருமதி மைத்திரி விக்கிரமசிங்க மற்றும்   திருமதி. ஸி ஜின்பிங்கை ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Read More

அதிக எண்ணிக்கையிலான சீன சுற்றுலா பயணிகள் இலங்கை வருவர் – ஜோன் அமரதுங்க

(UDHAYAM, COLOMBO) – இந்த வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான சீன சுற்றுலா பயணிகள் இலங்கை வருவர் என எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். சீன சுற்றுலாத்துறையினருக்காக நாடளாவிய ரீதியாக விருந்தக வசதிகள் உட்பட சகல வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சீன உத்தியோகபூர்வ சின்ஹூவா ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். உலக வல்லரசுகளில் ஒன்றாக திகழும் சீன சுற்றுலாத்தரப்பினரை இலங்கைக்கு வரவழைப்பதில் இலங்கை சுற்றுலாத்துறையினர் ஆவலுடன் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்….

Read More