சீனாவின் உதவியுடன் 13 வைத்தியசாலைகள் அபிவிருத்தி

UTV | COLOMBO – நாட்டிலுள்ள 13 வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு சீனாவிடமிருந்து எட்டரைக் கோடி டொலர் நன்கொடை கிடைத்துள்ளது.இதனை பயன்படுத்தி மீரிகம, சமாந்துறை, ஏறாவூர், பொத்துவில், ரிக்கில்லகஸ்கட, மெதிரிகிரிய, பதவிய, வலஸ்முல்ல, தலவான, மஹியங்கனை ஆதார வைத்தியசாலைகளும், தர்கா நகர், அளுத்கம, கராப்பிட்டிய பிரதேச வைத்தியசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படும் என்று சுகாதாரபோசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். குறித்த வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவுகளும், தாய்சேய் சிகிச்சை அலகுகளும், மருந்தக களஞ்சியங்கள்…

Read More

சீனாவின் நீர்மூழ்கி கப்பலை இலங்கையில் நங்கூரமிட மறுப்பு?

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்றை நங்கூரமிடச் செய்வதற்கான கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. உயர்மட்டத் தகவல்களை மேற்கோள்காட்டி ரொயிட்டர்ஸ் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த செய்தியின்படி இலங்கையில் ஒரு மாத காலத்துக்கு தமது நீர்மூழ்கி கப்பலை நங்கூரமிடச் செய்வதற்கான அனுமதியை சீனா கோரியுள்ளது. ஆனால் இதற்கான கோரிக்கையை அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு ஒக்டோர் மாதம் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று இலங்கையில் நங்கூரமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பில்…

Read More

இலங்கையில் நடைபெறும் பௌத்த மாநாட்டிற்கு சீனாவின் பூரண ஒத்துழைப்பு

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் நடைபெறவுள்ள பௌத்த மாநாட்டிற்கு சீனாவின் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று இலங்கைக்கான சீனத் தூதுவர் லீயூ சியான் தெரிவித்துள்ளார். இலங்கை – சீன ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 வருடங்கள  பூர்த்தியாவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்தில் அவர் உரையாற்றினார். இந்த வைபவம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்று ஆரம்பமானது. இது 12 ஆம் திகதி வரை வரை நடைபெறவுள்ளது. இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்தி, இலங்கையின் பொருளாதார கலாசார அபிவிருத்திக்கும்…

Read More