வங்கியில் கொள்ளை: வாடிக்கையாளருக்கு துப்பாக்கிச் சூடு

(UTV|HAMBANTOTA)-தங்காலை – குடாவெல்ல பகுதியிலுள்ள அரச வங்கி ஒன்றில் சுமார் 50 – 60 இலட்சம் ரூபா வரையான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இன்று காலை 09.45 அளவில், முகத்தை மூடியவாறு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இவ்வாறு கொள்ளையிட்டுள்ளனர். இதேவேளை, குறித்த வங்கிக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் மீதும், சந்தேகநபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால், காலில் காயமடைந்த அவர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Read More

பிலியந்தலை துப்பாக்கிச் சூடு – பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 7 பேர் விளக்கமறியலில்…

  (UDHAYAM, COLOMBO) – பிலியந்தலை பிரதேசத்தில் காவற்துறை மது ஒழிப்பு பிரிவினர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகத்துக்குரியவர் உள்ளிட்ட 7 பேரையும் எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் இன்று கெஸ்பேவ நீதவான் கிஹான் ரணவக முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலன்னறுவை – மெரிகல பிரதேசத்தில் வைத்து, விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று…

Read More

நான்கு மாத கர்பினித்தாய்கு சூடு வைத்த மாமியார் பொகவந்தலாவயில் சம்பவம் – [IMAGES]

(UDHAYAM, COLOMBO) – 22வயது மருமகளுக்கு சூடு வைத்தி மாமியார். பொகவந்தலாவ பெற்றோசோ தோட்டத்தில் சம்பவம் பொகவந்தலாவ பெற்றோசோ பிரீட்லேன்ட் தோட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் விஜயகௌரி 2013ம் ஆண்டு 02ம் மாதம் 09ம் திகதி காதல் திருமணம் முடித்து நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையில் தனது மாமியார் தனது மருமகளான விஜயகௌரிக்கு தீயினால் சூடுவைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கபட்டு வருவதாக பொகவந்தலாவ பொலிஸார் தெறிவிக்கின்றனர். விஜயகௌரி  நான்கு மாத கற்பினி தாயாக இருக்கின்ற நிலையில் 13.06.2017.செவ்வாய் கிழமை மாதாந்த…

Read More

இன்று காலை ஈரான் நாடாளுமன்றத்துக்குள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு

(UDHAYAM, TEHRAN) – இன்று காலை ஈரான் நாட்டு  நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஓர் நபர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

Read More

இந்தியாவில் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு: 6 பேர் பலி

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தின் போது 6 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு மண்ட்சோர் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடன்களில் இருந்து தங்களை விடுவிக்க வலியுறுத்தி, விவசாயிகளால் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இதன்போது அங்கு ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் தாக்குதல் நடத்தியவர்கள் யாரென்று அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Read More

பிலியந்தலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ; இரண்டு பேர் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில்

(UDHAYAM, COLOMBO) – பிலியந்தலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரில் இரண்டு பேர் களுபோவில மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12 வயது சிறுமி மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோரே இவ்வாறு சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களுள், 12 வயது சிறுமியின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், அவரை மேலதிக சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு கொண்டுசெல்ல தமக்கு உதவி செய்யுமாறு குறித்த சிறுமியின் தந்தை அதிகாரிகளிடம்…

Read More

பிலியந்தலை துப்பாக்கிச் சூடு தொடர்பில் 3 நாட்களுக்குள் அறிக்கை கோரப்பட்டுள்ளது

(UDHAYAM, COLOMBO) – பிலியந்தலை – மொரட்டுவ வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் நீதி மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க அறிக்கை ஒன்றை கோரியுள்ளார். காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் குறித்த சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கையினை  3 நாட்களுக்குள் கோரியுள்ளதாக அமைச்சின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் பிரபல போதை கடத்தல் குழுவினால் மேற்கொள்ளப்பட்டது என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அரச…

Read More

சற்று முன்னர் இருவர் மீது காவற்துறையினர் துப்பாக்கிச் சூடு

(UDHAYAM, COLOMBO) – சிலாபம் – ஆரச்சிகட்டு பிரதேச சபைக்கு அருகில் இருவர் மீது காவற்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். பெண்ணொருவரின் தங்க சங்கிலியை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற இருவர் மீதே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read More

இந்திய கடற்றொழிலாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய தேவை இலங்கை கடற்படைக்கு இல்லை – கடற்படைத் தளபதி

(UDHAYAM, COLOMBO) – இந்திய கடற்றொழிலாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய தேவை இலங்கை கடற்படைக்கு இல்லை என கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். கச்சத்தீவில் நேற்று இடம்பெற்ற புனித அந்தோனியார் ஆலய திருவிழா நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினர், இந்திய கடற்றொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், இந்திய கடற்றொழிலாளர்கள் இந்த முறை கச்சதீவு திருவிழாவில் கலந்துகொள்ள வில்லை. இந்திய- இலங்கை கடல்…

Read More