நாட்டில் தலைதூக்கிவரும் இனவாத செயற்பாடுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தார் கிழக்கு முதலமைச்சர்

(UDHAYAM, COLOMBO) – ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. திருகோணமலையில் உள்ள கிழக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில்  கெராட் ரான் லேனட் (GERHARD RAN”T LAND)  தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு பங்கேற்றது. இதன் போது கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ் தண்டாயுதபானி,கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்…

Read More

நாட்டில் இடம்பெற்ற இனவாத ரீதியான செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை!

(UDHAYAM, COLOMBO) – நாட்டில் இடம்பெற்ற இனவாத ரீதியான செயற்பாடுகள் தொடர்பில், விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, சட்டம் ஒழுங்குகள் அமைச்சருக்கு, ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல்கள் மற்றும் அரசகரும மொழிகள் விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Read More

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக கற்றல் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

(UDHAYAM, COLOMBO) – கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக கற்றல் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. கிழக்கு பல்கலைகழக திருகோணமலை வளாகத்தில் நேற்று பரீட்சை நடைபெறுவதாக இருந்தது. ஏற்கனவே பல்கலைக்கழகத்தினுள் ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக இடைநிறுத்தப்பட்ட 16 மாணவர்களை பரீட்சைக்கு தோற்ற நிர்வாகம் தடை விதித்திருந்தது. ஆனாலும் அவர்களையும் பரீட்சைக்கு உள்வாங்கக்கோரி மாணவர்களின் அநேகமானோர் பரீட்சையை பகிஷ்கரித்து இருந்தனர். ஆனாலும் புதிய 13 மாணவர்கள் மற்றும் பரீட்சையை முழுமையாக நிறைவு செய்யாத 4 மாணவர்கள் உட்பட…

Read More

நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் செயற்பாடுகள் ; மகிந்த அணி அதிருப்தி

(UDHAYAM, COLOMBO) – நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் செயற்பாடுகள் தொடர்பில் மகிந்த அணி அதிருப்தியை வெளியிடுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட அமைதியற்ற நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். தேசிய சுதந்திர முன்னணி நாடாளுமன்றத்தில் தனித்தியங்க அனுமதிக்க முடியாது என்று நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்ததை அடுத்து அங்கு குழப்ப நிலை உருவானது. இதனால் மூன்று தடவைகள் நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டது. அத்துடன் குழப்பகரமாக செயற்பட்டமைக்காக மகிந்த…

Read More