தந்தை செல்வாவின் 40ஆவது ஆண்டு நினைவு தினம் கொழும்பில் : அமைச்சர் ராஜித நினைவுப்பேருரை
(UDHAYAM, COLOMBO) – இலங்கை தமிழரசுக்கட்சியின் நிறுவுனர் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 40ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 26ஆம் திகதி புதன்கிழமை மாலை 53.0மணிக்கு நினைவுப்பேருரை நிகழ்வு நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் மௌன அஞ்சலி, தமிழ்த் தாய் வாழ்த்து, தந்தை செல்வாவின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து சுமந்திரன் எம்.பி தலைமையுரை ஆற்றவுள்ளார். அதனைத்தொடர்ந்து நிழ்வில் கௌரவிருந்தினராக கலந்துகொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…