(UTV | கொழும்பு) – இந்திய இராணுவத்தின் தலைமை அதிகாரி (சிஓஏஎஸ்) ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே(Manoj Mukund Naravane) ஐந்து நாள் பயணமாக இன்று இலங்கை வந்தடைந்ததாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
ஜெனரல் நரவனே மற்றும் அவரது துணைவி உட்பட ஐந்து பேர் கொண்ட குழு இன்று இலங்கைக்கு வந்துள்ளது.
இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், ஜெனரல் நரவனே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேசிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, வெளியுறவு அமைச்சின் செயலாளர் ஆகியோரை மரியாதை நிமித்தமாகச் சந்திக்க உள்ளார்.
இதனையடுத்து எதிர்வரும் வியாழக்கிழமை, இந்திய இராணுவத் தலைமை அதிகாரி, மாதுரு ஓயா சிறப்புப் பயிற்சிப் பாடசாலையில் இடம்பெறும் இருதரப்பு இராணுவப் பயிற்சியான ‘மித்ரா சக்தி’யின் இறுதிக் கட்டத்தைப் பார்வையிடுவார்.