“மரத்துக்கும், யானைக்கும் வாக்களித்து மரத்துப்போன கைகள் மயிலுக்கு வாக்களிப்பதிலேயே தற்போது ஆர்வம்” – அமைச்சர் ரிஷாட்

(UTV|COLOMBO)-மரத்துக்கும் யானைக்கும் வாக்களித்துப் பழகிப்போன கைகள் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் மயிலின் பக்கம் திரும்பியுள்ளதால் மக்கள் காங்கிரஸ் பல உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் என்பதில் தமக்கு நம்பிக்கை இருப்பதாக அக்கட்சியின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் திருகேணமலை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு நேற்று முன்தினம் (01) திருமலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு…

Read More

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் மீன்பிடியை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் பொருளாதார நெருக்கடி

(UTV|BATTICALO)-மட்டக்களப்பு மாவட்டத்திலும் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் மீன்பிடி நடவடிக்கையினை தவிர்த்துக்கொள்ளுமாறு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்தசில நாட்களாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் சுமார் 25 ஆயிரம் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடல் சீற்றமாகக் காணப்படுவதனால் மீன்பிடி வள்ளங்கள் மற்றும் வலைகளும் பாதுகாப்பான இடங்களில் தரிக்கச்செய்யப்பட்டுள்ளன. அதேவேளை வாவியிலும் அதிக நீரோட்டம் காணப்படுவதனால் மீன் பிடிக்கச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர். காலநிலை மாற்றம் ஏற்பட்டதையடுத்து நன்னீர் மீன்களுக்கு அதிக கிராக்கி காணப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

Read More

“நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான சுமூக சூழ்நிலை தற்போது உதயம்” – பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான சுமூக சூழ்நிலை தற்போது உதயமாகியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது பிரதமர் இதனைக் கூறியுள்ளார். இலங்கையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள சர்வதேசத்தில் இருந்து பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் பல்வேறு அபிவிருத்தி செயற்பாடுகள் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்படுகின்றது. தற்போது ஜி.எஸ்.பி வரிச்சலுகை கிடைத்துள்ளது. இதன்மூலம் ஏற்றுமதிக்கான சந்தர்ப்பம் சலுகைகள் அதிகரித்துள்ளன. இவை அனைத்தும் இலங்கையில் நீதியானதும்,…

Read More

காலி வீதியில் தற்போது வாகன நெரிசல்

(UDHAYAM, COLOMBO) – வெள்ளவத்தையில்  கட்டிடமொன்று இடிந்து விழுந்தமை காரணமாக காலி வீதியில் தற்போது வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Read More

மகளிர் உலகக் கிண்ண தகுதிகான் போட்டிகள் தற்போது கொழும்பில்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பு என். சி. சி. மைதானத்தில் தற்போது இடம்பெறுகின்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி, முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இந்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் மகளிர் அணி, 7 விக்கட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றது. இதேவேளை, இந்திய மற்றும் தென்னாபிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பு பி. எஸ். எஸ் மைதானத்தில் இடம்பெறுகின்றது….

Read More