கட்டாருக்கான இலங்கை தூதுவர், பதவியில் இருந்து விலக தீர்மானம்

(UDHAYAM, COLOMBO) – கட்டாருக்கான இலங்கை தூதுவர் பதவியில் இருந்து விலக ஏ.எஸ்.பி லியனகே தீர்மானித்துள்ளார். கொழும்பில் உள்ள அவருக்கான பீக்கொக் மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார். தமக்கு தூதுவர் பதவி தேவையில்லை என்றும் அதன் காரணமாகவே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமக்கு இலங்கையில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் காணப்படுவதாகவும் ஏ.எஸ்.பி லியனகே குறிப்பிட்டுள்ளார்.

Read More

ஐ.நா.சபையின் இளைஞர் அலுவல்கள் இலங்கைத் தூதுவர் – ஜனாதிபதி சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் என்டோனியோ குற்றேரஸ் தனது இளைஞர் அலுவல்கள் தூதுவராக நியமித்துள்ள இலங்கையைச் சேர்ந்த திருமதி ஜயத்மா விக்கிரமநாயக்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கையின் நற்பெயரை உலகம் முழுவதும் அறியச்செய்து திருமதி ஜயத்மா விக்கிரமநாயக்க தாய்நாட்டிற்கு பெற்றுக்கொடுத்த கௌரவத்தினை ஜனாதிபதி பாராட்டினார். அவருக்கு தனது வாழ்த்துக்களை ஜனாதிபதி தெரிவித்ததுடன், இலங்கையின் இளைய தலைமுறையினருக்காகவும் உலகவாழ் இளைய தலைமுறையினருக்காகவும் அவர்…

Read More

கிழக்கு முதலமைச்சர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் ஆகியோருக்கிடையில் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) -கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்  மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் அப்துல் ஹமீட் அப்துல் பத்தாஹ் காஸிம் அல் முல்லாஹ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. நேற்று பிற்பகல் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதரகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன இதற்போது இலங்கையில் முஸ்லிங்கள் எதிர்நோக்கி வரும் அச்ச நிலைமை தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் இதன் போது  ஐக்கிய அரபு  இராச்சியத்…

Read More

குருணாகலை பள்ளிவாசல் எரிதிரவ குண்டுதாக்குதல் – அமெரிக்க தூதுவர் கவலை!

(UDHAYAM, COLOMBO) – குருணாகலை மல்லவபிட்டி பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் நடத்தப்பட்ட எரிதிரவ குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என தாம் நம்புவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அடுல் கேஷப் தெரிவித்துள்ளார். அவரது உத்தியோகபூர்வ ட்விட்டர் வலைத்தள பக்கத்தில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெறும் இவ்வாறான சம்பவங்கள் தமக்கு கவலையை ஏற்படுத்துவதாகவும் அடுல் கேஷப் குறிப்பிட்டுள்ளார். குருணாகல் கண்டி வீதியின் மல்லவபிட்டி பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது அடையாளம் தெரியாத…

Read More