குருணாகலை பள்ளிவாசல் எரிதிரவ குண்டுதாக்குதல் – அமெரிக்க தூதுவர் கவலை!

(UDHAYAM, COLOMBO) – குருணாகலை மல்லவபிட்டி பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் நடத்தப்பட்ட எரிதிரவ குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என தாம் நம்புவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அடுல் கேஷப் தெரிவித்துள்ளார்.

அவரது உத்தியோகபூர்வ ட்விட்டர் வலைத்தள பக்கத்தில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெறும் இவ்வாறான சம்பவங்கள் தமக்கு கவலையை ஏற்படுத்துவதாகவும் அடுல் கேஷப் குறிப்பிட்டுள்ளார்.

குருணாகல் கண்டி வீதியின் மல்லவபிட்டி பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது அடையாளம் தெரியாத சிலர் எரிபொருள் நிரப்பப்பட்ட போத்தல்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/ATUL-KESHAP-TWITTER-UDM-ENG.jpg”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *