நலன்புரி நிலையங்களில் 72 ஆயிரத்திற்கும் அதிகமானோர்
(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட 18 ஆயிரத்து 700ற்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 72 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இதுதொடர்பாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன மேலும் தெரிவிக்கையில் ஆயிரத்து 540 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. 7 ஆயிரத்து 814 வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். நிர்கதியானவர்கள் 355 நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கின்றார்கள். நிவாரணங்களை வழங்க அரசாங்கம் 125 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருக்கின்றது. நிவாரண பணிகள்…