வீதியில் நடமாடும் மன நோயாளர்களுக்காக புதிய நலன்புரி திட்டம்

(UDHAYAM, COLOMBO) – பொது இடங்கள் மற்றும் வீதி ஓரங்களில் வாழும் மன நோயாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கி அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கும் விஷட நலன்புரி திட்டம் ஒன்றை இலங்கை உல நிலை தொடர்பான மருத்துவர்களின் சங்கம் ஆரம்பித்துள்ளது.

இவ்வாறு வீதிகளில் நடமாடும் மன நோயாளர்களை அரசாங்கம் கண்டறிந்து மருத்துவமனையில் சேர்ப்பதற்கு நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலைகளுக்கு மத்தியில் நல்லெண்ணத்தின் நோக்கில் மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்காக இலவசமாக செயல்படுத்தப்படும் நலன்புரி திட்டத்தை குறித்த சங்கம் ஆரம்பித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள வீதியில் நடமாடும் மன நோயாளர்களை அங்கொட மன நல மருத்துவமனையில் ஒப்படைத்து குணப்படுத்துவதே இந்த சங்கத்தின் அடிப்படை செயலாகும்.

இவ்வாறான நோயாளர்களை சுத்தப்படுத்தி தேவையான அனைத்து ஆடைகள் உள்ளிட்ட சுகாதார பொருட்களும் அடங்கி பொதி ஒன்று அந்த சங்கத்தால் வழங்கப்படும்.

இலங்கையில் சேவை ஆற்றும் மன நல மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள் மற்றும் மன நல ஆலோசகர்கள் குழுவும் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த சங்கத்தின் நோக்கமானது, எதிர்வரும் 5 வருடத்தில் நாடாளவிய ரீதியில் வீதியில் நடமாடும் மன நோயாளர்களை முழுமையாக தவிர்ப்பதாகும்.

உங்களுக்கு இவ்வாறான வீதியில் நடமாடும் மன நோயாளர்கள் தொடர்பில் தகவல் வழங்க முடிந்தால் அல்லது உங்களுக்கு விருப்பமுடைய விதத்தில் உதவி வழங்க முடியுமானாலும் 071 8 30 30 30 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *