நாளை ‘புளு மூன்’ , ‘பிளட் மூன்’ மற்றும் ‘சூப்பர் மூன்’- 150 ஆண்டுகளுக்கு பிறகு அரிய நிகழ்வு

(UTV|COLOMBO)-நாளை முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. 150 ஆண்டுகளுக்கு பிறகு, 3 நிகழ்வுகள் ஒரே நாளில் நடக்கும் அரிய நிகழ்வு நாளை நடக்கிறது. சூரியனுக்கும், நிலாவுக்கும் நடுவில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது படும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த முழு சந்திர கிரகணம் நாளை ஏற்படுகிறது. இது, இந்த மாதத்தின் 2-வது பவுர்ணமி ஆகும். அப்போது, நிலா நீல நிறத்தில்…

Read More

கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் நாளை

(UTV|COLOMBO)-உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்கு முன்பாக பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதுக்காக நாளை நண்பகல் 12 மணிக்கு கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு முன்பாக பாராளுமன்றத்தை​ கூட்டுவது சிறந்ததென பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைய கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாளை நடைபெற உள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துக்கொள்ள தேர்தல்கள் ஆணையாளருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    …

Read More

க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை அதிகாலை இணையத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை முற்பகல் 10.00 மணிமுதல் பெறுபேறுகள் வழங்கப்படவுள்ளது. கொழும்புக்கு வெளியே உள்ள பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள….

Read More

யாழில் தகவல் அறியும் சட்டம் தொடர்பான செயலமர்வு நாளை

(UDHAYAM, COLOMBO) – தகவல் அறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக வடமாகாண சபை பிரதம செயலாளர் ,மாவட்ட செயலாளர்கள் ,அமைச்சு மற்றும் திணைக்களத்தின் தலைமை அதிகாரிகள் பிரதேச செயலாளர்களுக்கான செயலமர்வொன்று நாளை (07)  நடைபெறவுள்ளது. நிதி மற்றும் ஊடத்துறை அமைச்சும், அரசாங்க தகவல் திணைக்களமும் இணைந்து ஏற்பாடுசெய்துள்ள இந்த செயலமர்வுக்கு அமைவாக வடமாகாண ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வும் நாளை இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள கிறீன் கிறாஸ் ( Green Grass  Hotel,Asservatham Lane, Jaffna ) ஹோட்டலில் நாளை…

Read More

எழுத்தூரில் நீர் உள்வாங்கும் நிலையம் நாளை மறுதினம் திறப்பு

(UDHAYAM, COLOMBO) – மன்னார், எழுத்தூரில் நீர் உள்வாங்கும் நிலையத்தினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்துவைக்கவுள்ளார். எதிர்வரும் 07ம் திகதி வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்படவுள்ள இந்த நீர் உள்வாங்கும் நிலையம் தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் சரத் சந்திரவிதான, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ….

Read More

நாளை முதல் விசேட டெங்கு வேலைத்திட்டம்

(UDHAYAM, COLOMBO) – டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக நாளை முதல் இரண்டு வார காலத்திற்கு பொது மக்களின் பங்களிப்புடன் விசேட வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு தயாராகியுள்ளது. மழையுடன் கூடிய காலநிலையில் டெங்கை கட்டுப்படுத்துவது இதன் நோக்கமாகும். இதுவரை 70 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனம் காணப்படடுள்ளனர். அவர்களில் 25 சதவீதமானோர் 19 வயதுக்கு கீழானவர்கள் என்று டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த நாளை தொடக்கம் முன்னெடுக்கப்படவுள்ள விசேட வேலைத்திட்டம்!

(UDHAYAM, COLOMBO) – டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாளை தொடக்கம் இரண்டு வார காலத்தை சுத்தப்படுத்தும் வாரமாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக அதிகரிக்கக்கூடும் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்காக சிவில் பாதுகாப்பு படையினர் நூறு பேர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

நாளை முதற்கடற்கலம் வெள்ளோட்டம்

(UDHAYAM, COLOMBO) – பாரிய ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட முதற்கடற்கலம் வெள்ளோட்டமிடப்படவுள்ளது. சீனோர் நிறுவனம் தயாரித்த முதலாவது ஆழ்கடல் மீன்பிடிப் படகு நாளை நீர்கொழும்பு கடலில் வெள்ளோட்டம் இடப்படும். குடறறொழிp நீரியவள அமைச்சர் மஹிந்த அமரவீர பிரதம அதிதியாக கலந்து கொள்வார். கடற்றொழில் துறையில் பயன்படுத்தப்படும் சிறிய அளவிலான கடற்கலங்களுக்கு பதிலாக நவீன வசதிகள் கொண்ட பெரிய கடற்கலங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான திட்டத்தை கடற்றொழில் அமைச்சு ஆரம்பித்துள்ளது. சீனோர் என்ற அரச…

Read More

நாளை நள்ளிரவு முதல் தொடரூந்து சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்..

(UDHAYAM, COLOMBO) – பல கோரிக்கைகளை முன்வைத்து தொடரூந்து சாரதிகள் மற்றும் தொடரூந்து கட்டுப்பாட்டாளர்கள் நாளை நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். பணிக்கு இணைத்தல், பதவி உயர்வு மற்றும் வேதன பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நிர்வாக அதிகாரி நடவடிக்கை மேற்கொள்ள வில்லை. இதன் காரணமாகவே இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்ததாக தொடரூந்து சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட குறிப்பிட்டார். பிரச்சினை தொடர்பில் அண்மையில் பேச்சு வார்த்தை இடம்பெற்றது. எனினும் அப்போது…

Read More

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நாளை நிறைவு

(UDHAYAM, COLOMBO) – 2017ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நாளை வியாழக்கிமை (15) நிறைவடைவதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை மாணவர்கள் அதிபர்கள் மூலமாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் குறிப்பிட்ட பரீட்சைக் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப்படிவத்தை பதிவுத்தபால் மூலம் அனுப்பி வைக்கவேண்டும்.

Read More