நாளை முதற்கடற்கலம் வெள்ளோட்டம்

(UDHAYAM, COLOMBO) – பாரிய ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட முதற்கடற்கலம் வெள்ளோட்டமிடப்படவுள்ளது.

சீனோர் நிறுவனம் தயாரித்த முதலாவது ஆழ்கடல் மீன்பிடிப் படகு நாளை நீர்கொழும்பு கடலில் வெள்ளோட்டம் இடப்படும்.

குடறறொழிp நீரியவள அமைச்சர் மஹிந்த அமரவீர பிரதம அதிதியாக கலந்து கொள்வார்.

கடற்றொழில் துறையில் பயன்படுத்தப்படும் சிறிய அளவிலான கடற்கலங்களுக்கு பதிலாக நவீன வசதிகள் கொண்ட பெரிய கடற்கலங்கள் வழங்கப்படவுள்ளன.

இதற்கான திட்டத்தை கடற்றொழில் அமைச்சு ஆரம்பித்துள்ளது. சீனோர் என்ற அரச நி;றுவனம் இத்தகைய ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளை தயாரித்து வருகிறது. ஒரு படகின் பெறுமதி ஏழு கோடி ரூபாவாகும். இதற்குரிய செலவில் பாதியை அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ளது.

மீன்களை பிடிப்பதற்கு வலைகளை பயன்படுத்தாமல், சர்வதேச அங்கீகாரம் பெற்ற பொறிமுறையை உபயோகப்படுத்தும் வகையில் கடற்கலங்கள் தயாரிக்கப்படுகின்றன. பிடிக்கப்பட்ட கடல் உணவுகளின் தரம் குறையாமல் சேமித்து வைக்கக்கூடிய களஞ்சிய வசதிகளும் அவற்றில் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *