இரத்தினபுரி, நிவிதிகல பாடசாலைகள் இன்று மூடல்
(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலையால் சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் நிவிதிகல கல்வி வலயங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்றைய தினம் குறித்த கல்வி வலயங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வி பணிப்பாளர் சேபால குறுப்பாரச்சி எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார். எனினும் இரத்தினபுரி மாவட்டத்தின் எம்பிலிபிட்டிய மற்றும் பலாங்கொட கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகள் இன்றை தினம் வழமை போல் இயங்கும்…