கணிதப்பாட பரீட்சை எழுதிய GCE (O/L) மாணவர் தற்கொலை

(UTV|POLANNARUWA)-பொலநறுவை பகுதியில் கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர் ஒருவர் விசமருந்தி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இவர் நேற்றைய தினம் இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற கணித பாட பரீட்சைக்கு தோற்றிய மாணவர் தனக்கு உரிய முறையில் பதிலளிக்க முடியாமல் போனதாக நினைத்து இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என குறித்த மாணவரின் தந்தை காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார். தந்தையின் முச்சக்கர வண்டியில் வீட்டிலிருந்து புறப்பட்ட…

Read More

தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சை அனுமதிப் பத்திரங்கள்

(UDHAYAM, COLOMBO) – இவ்வாண்டுக்குரிய தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சையின் அனுமதி அட்டைகளை  அதிபர்மாருக்கு தபால் மூலம் அனுப்பும் பணி பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார். அனுமதி அட்டைகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய தேவையிருந்தால் ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர் பரீட்சைத் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சை ஒழுங்கமைப்புப் பிரிவிற்கு அறிவிக்க வேண்டும். இவ்வாண்டிற்குரிய தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது. இம்முறை 3 லட்சத்து 56…

Read More

புலமை பரிசில் பரீட்சை விண்ணப்பம் அஞ்சலிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – தரம் 5 மாணவர்களுக்காக புலமை பரிசில் பரீட்சை விண்ணப்பம் இன்றைய தினம் அஞ்சல் செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அத்துடன், திருத்தங்கள் இருப்பின் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதிவரை விண்ணப்பிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Read More

உதவி சாரதி ஆலேசாகர்களை பதிவு செய்வதற்கான எழுத்து மூலப் பரீட்சை

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலையால்  ஒத்தி வைக்கப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் உதவி சாரதி ஆலேசாகர்களை பதிவு செய்வதற்கான எழுத்து மூலப் பரீட்சை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் டபிள்யூ எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்கையில்: கொழும்பில் ஏழு பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சை நடைபெறும் சகல விண்ணப்பதாரிகளுக்குமான புதிய பரீட்சை அனுமதிப்பத்திரம் கடந்த 22 ஆம் திகதி தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தார். இது குறித்து அறிய விரும்பினால்…

Read More

உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படவில்லை – பரீ்டசைத் திணைக்களம்

(UDHAYAM, COLOMBO) – ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெறவுள்ள உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சைகளை ஒத்தி வைக்குமாறு அறிவிப்போ அல்லது கோரிக்கையோ விடுக்கப்படவில்லை என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

வெளிநாட்டு சேவைகள் தரம் 3க்கான ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சை

(UDHAYAM, COLOMBO) – இலங்கை வெளிநாட்டு சேவைகள் தரம் மூன்றுக்கான ஆட்சேர்ப்பு திறந்த போட்டிப் பரீட்சைகள் எதிர்வரும் 18ம்,24ம்,25ம் திகதிகளில் இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்தார். கொழும்பில் 25 பரீட்சை நிலையங்களில் மூவாயிரத்து 700க்கு மேற்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றுகின்றார்கள். இவர்களுக்குரிய பரீட்சை அனுமதி அட்டைகள் இன்று தபாலில் சேர்க்கப்படுவதாக  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

Read More

பரீட்சை ரத்து : அரசாங்க தகவல் திணைக்களம்

(UDHAYAM, COLOMBO) – 2017ம் ஆண்டு மே மாதம் 28ம் திகதி நடைபெறவிருந்த பரீட்சை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தற்போதைய அசாதாரண காலநிலையின் காரணமாக 2017ம் ஆண்டு மே மாதம் 28ம் திகதி இடம்பெறவிருந்த அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையின் 111 தரத்திற்கு சேர்த்துக் கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. 93,952 பரீட்சார்த்திகள் குறித்த…

Read More

சீரற்ற காலநிலை காரணமாக அரச முகாமைத்துவ உதவி சேவை பரீட்சை பிற்போடல்

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் 27 ஆம் மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த அரச முகாமைத்துவ உதவி சேவையின் 3 ஆம் தரத்துக்கான ஆட்சேர்ப்புக்கான மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திறந்த போட்டிப்பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையொன்றினூடாக இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. பிற்போடப்பட்ட குறித்த பரீட்சைகள் மீண்டும் நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரங்கள் இரத்துச் செய்யப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read More

கொரிய மொழித் தேர்ச்சி பரீட்சை எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பம்

  (UDHAYAM, COLOMBO) – தென்கொரியாவில் தொழில் வாய்ப்பை எதிர்பார்த்துள்ளவர்களுக்கான கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சை எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த பரீட்சை பன்னிபிட்டியவில் அமைந்துள்ள கொரிய களனி மத்திய நிலையத்தில் தொடர்ந்து நான்கு மாதங்கள் நடைபெறும் என்று இலங்கை லேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. இந்த பரீட்சையில் சுமார் 23 ஆயிரம் இளைஞர் யுவதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் நாளாந்தம் 320 பேர் தோற்றவுள்ளனர். இம்முறை பரீட்சைகள் கணனியூடாகவே நடைபெறவுள்ளதாகவும் பரீட்சைக்கான திகதி நேரம் மற்றும் பரீட்சை…

Read More