(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலையால் ஒத்தி வைக்கப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் உதவி சாரதி ஆலேசாகர்களை பதிவு செய்வதற்கான எழுத்து மூலப் பரீட்சை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் டபிள்யூ எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்கையில்:
கொழும்பில் ஏழு பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சை நடைபெறும் சகல விண்ணப்பதாரிகளுக்குமான புதிய பரீட்சை அனுமதிப்பத்திரம் கடந்த 22 ஆம் திகதி தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து அறிய விரும்பினால் 1911 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் பரீட்சைகள் ஆணையாhள் கேட்டுக் கொண்டுள்ளார்.