நிரூபம் சென் காலமானார்.

(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் நிரூபம் சென் நேற்று முன்தினம் புதுடில்லியில் காலமானார்.

இறக்கும் போது 70 வயது.

நிரூபம் சென் 2002 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக பணியாற்றினார்.; இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகராகவும் பதவிவகித்தவர்.

1969 ஆம் ஆண்டு முதல் இந்திய இராஜதந்திர சேவையில் இணைந்து பணியாற்றிய அவர் பல்வேறு உயர் பதவிகளையும் வகித்திருந்தார். இலங்கையில் உயர்ஸ்தானிகராக கடமையாற்றுவதற்கு முன்னர் பல்கேரியா மற்றும் நோர்வே ஆகிய நாடுகளிலும் இந்திய உயர்ஸ்தானிகராகவும் கடமையாற்றினார்.

நிரூபம் சென் ஐக்கிய நாடுகளுக்கான இந்திய வதிவிட பிரதிநிதியாகவும் ஐக்கிய நாடுகளின் வருடாந்த அமர்வில் அவைத் தலைவரின் விசேட சிரேஷ்ட ஆலோசகராகவும் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *