பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர நிதி உதவியாக 10,000 ரூபா

(UTV|COLOMBO)-சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். அதன்படி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10,000 ரூபா படி அவசர நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் செயலாளர் கூறியுள்ளார்.   [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி…

Read More

ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட 40 மாணவர்கள் வைத்தியசாலையில்

(UDHAYAM, COLOMBO) – மத்துகமை – வலகெதர மகா வித்தியாலய மாணவர்கள் சிலர், அசாதாரண நிலைமையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தரம் 6 மற்றும் 8 இல் கல்வி பயிலும் சுமார் 30 மாணவர்களே இவ்வாறு மத்துகமை தர்கா மருத்துவமனையில் இன்று முற்பகல் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன், சுவாச கோளாறு உள்ளிட்ட பல நோய் அறிகுறி காரணமாக, மேலும் 10 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலருக்கு வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவில் கிசிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை…

Read More

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரச காணிகள் – ஜனாதிபதி ஆலோசனை

(UDHAYAM, COLOMBO) – நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை குடியமர்த்த இயன்றளவில் அரச காணிகளை பயன்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதாகும். அதேபோல் , அரச காணிகள் போதாத பட்சத்தில் மாத்திரம் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு சொந்தமான தனியார் காணிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி இதன் போது ஆலோசனை வழங்கியுள்ளார்.

Read More

பாதிக்கப்பட்ட களுத்துறை பிரதேசம் தொடர்பான விசேட மீளாய்வு கூட்டம்

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை பிரதேசத்தில் அண்மையில் வெள்ள அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களை மீளாய்வு செய்து உரிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான விஷேட மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. நகரதிட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் கேட்போர் கூடத்தில்  அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில்  இந்த மீளாய்வுக் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஏ.சீ.எம்.நபீல், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கே.ஏ.அன்சார், பொது முகாமையாளர் தீப்தி சுமனசேகர, இலங்கை மின்சார சபை, வீதி அபிவிருத்தி…

Read More

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கனடா நிதியுதவி

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மேலும் 2 லட்சம் டொலர் நிதியுதவியை கனடா வழங்கவுள்ளது. இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த மேலதிக நிதி உதவியுடன், அனர்த்த பாதிப்புக்களுக்காக 5 லட்சத்து 94 ஆயிரம் டொலர் நிதி உதவியை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக கனேடிய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

Read More

பாதிக்கப்பட்ட 25 ஆயிரம் மாணவர்களுக்கு நிவாரணப் பொதி

(UDHAYAM, COLOMBO) – அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 25 ஆயிரம் மாணவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளன. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கு அமைய இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில  தினங்களால் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இந்த நிவாரணப்பொதியில் அடங்கியிருப்பதாக கல்வி அமைச்ச தெரிவித்துள்ளது. எட்டு மாவட்டங்களில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக இந்த நிவாரண வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். பாடசாலை மாணவர்கள்…

Read More

பாதிக்கப்பட்ட பிரதேச கழிவுகளை அகற்ற முறையான வேலைத்திட்டம் –ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கழிவுகளை அகற்றுவதற்கு முறையான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்தல் தொடர்பாக இன்று (06) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். கழிவு முகாமைத்துவம் தொடர்பான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தி கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கழிவு முகாமைத்துவ செயற்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி இதன்போது…

Read More

பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்வைத் துரிதப்படுத்தும் நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – வெள்ளத்தினாலும் மண்சரிவினாலும் மிக மோசமாக அழிவுக்குட்பட்ட இரத்தினபுரி தேர்தல் தொகுதி மக்களின் இயல்பு வாழ்வைத் துரிதப்படுத்தும் நடவடிக்கைகளை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் மேற்கொண்டுள்ளார். இரத்தினபுரி தேர்தல் தொகுதியின் அனைத்துப் பிரதேசங்களையும் துரிதமாக மீள்கட்டியெழுப்பி பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை துரிதமாக பெற்றுக்கொடுப்பதற்கு இப் பிரதேசத்தில் இடம்பெற்ற சேத விபரங்களின் மதிப்பீட்டறிக்கையை ஒரு வார காலத்துக்குள் கையளிக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இரத்தினபுரி தொகுதியில் பாதிக்கப்பட்ட அனைத்துப் பிரதேசங்களையும் சீர் செய்யும் பணிக்கு…

Read More

பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்திற்கு ஜனாதிபதி விஜயம்

(UDHAYAM, COLOMBO) – வெள்ளம், மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டகளுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள, யட்டகம்பிற்றிய, நாஹகதொல பிரதேசங்களுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனகண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டிருந்தார். இன்று முற்பகல் மேற்கொண்ட இந்த விஜயத்;தின்போது சேதமடைந்த வீடுகள் மற்றும் காணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார். உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றாடல் அமைச்சினால் அப்பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார். இராணுவத்தினர் மற்றும் சீன உதவிக் குழுவின் பங்களிப்புடன் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது. பாஹியங்கல மலை மண்சரிவுக்குட்பட்டு நாஹகதொல கங்கையில்…

Read More

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக விசேட நிதியம்

(UDHAYAM, COLOMBO) – பாதிக்கப்பட்ட மாணவர்களின் தேவைகளை பூர்த்திசெய்வதற்காக விசேட நிதியம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. ஐக்கியக் தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஆளும்கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாறசிங்க தெரிவித்தார். இதன் ஆரம்பமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கென தமது ஒரு மாத சம்பளத்தை வழங்கவுள்ளனர். இதற்கு பங்களிப்பு செய்யவிரும்புவோர் பாராளுமன்ற இலங்கை வங்கியின் கிளையின் வைப்பீட்டுக்கணக்கின் இலக்கத்தில் பணத்தை வைப்பிலிடமுடியும்…

Read More