தேர்தல் முறைப்பாடுகளுக்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விஷேட பிரிவு
(UTV|COLOMBO)-தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் விஷேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கைகளின் போது இடம்பெறுகின்ற உரிமை மீறல்கள் சம்பந்தமாக கண்டறிவது இதன் நோக்கமாகும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது. இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெண் வேட்பாளர்களை இலக்காக கொண்டு இடம்பெறுகின்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பதிவாகியுள்ளதாகவும், அது சம்பந்தமாக இந்த பிரிவு விஷேட அவதானம் செலுத்தவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 24 மணித்தியாலங்களும் செயற்படுகின்ற 0773 088 135 அல்லது 0773…