கிளிநொச்சி மகா வித்தியாலத்தில் தேன் குளவி கூடு ஆரம்ப பிரிவு பூட்டு

(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு வகுப்பறை கட்டிடத்  தொகுதி ஒன்றில் காணப்பட்ட  தேன் குளவி கூடுகள் காரணமாக ஆரம்ப பிாிவைச் சேர்ந்த மாணவா்கள் வீடுகளுக்கு அனுப்பட்டுள்ளனர்.

ஆரம்ப பிரிவு வகுப்பறை கட்டிடம் ஒன்றில்  பெரிய மூன்று தேன் குளவி கூடுகள்  இன்று திங்கள் கிழமை காலை அவதானிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவா்களின் பாதுகாப்பு கருதி தரம் நான்கு வரையான மாணவா்கள் மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

அத்தோடு பிற்பகல் பாடசாலை முடிவுற்றதன் பி்ன்னா் தேன் குளவி கூடுகளை அகற்றும் நடவடிக்கைகள மேற்கொள்ளப்பட்டு நாளை முதல் செவ்வாய் கிழமை வழமை பாடசாலை இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிளிநொச்சி மகா வித்தியாலத்தில் தொடர்ந்தும் குரங்குகளின் அட்டகாசம் காணப்பட்டு வருகிறது. பாடசாலை நேரங்களில் சகஜமாக பாடசாலை வளாகத்தில் சுற்றித்திரியும் குரங்குகள் வகுப்பறைக்குள்ளும் சென்று மாணவா்களின் கற்றல் உபகரணங்கள்  மற்றும் உணவு பொதிகளையும் எடுத்துச் செல்வதாக பாடசாலை நிர்வாகத்தினால் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

பாடசாலையால்  வெடிகள் கொளுத்தப்பட்டு குரங்குகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுப்பப்பட்ட போதும் அவை வெற்றியளிக்க வில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே உரிய திணைக்களம் பாடசாலையின்  செயற்பாடுகளுக்கு இடையூறாக காணப்படுகின்ற குரங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  பாடசாலையால் கோரப்பட்டுள்ளது.

எஸ்.என்.நிபோஜன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *