வடக்கில் படையினர் வசமிருந்த காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் 75 சதவீதம் பூர்த்தி
(UTV|JAFFNA)-காங்கேசன்துறையில் இருந்து பருத்தித்துறை வரையிலான ஏபி-21 நெடுஞ்சாலை இன்று தொடக்கம் மக்கள் பாவனைக்காக திறக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த வீதி 1990 ஆம் ஆண்டு ஜூன் 20ம் திகதி தொடக்கம் மூடப்பட்டிருந்தது. இது மீண்டும் திறக்கப்படுவதால் மக்களின் பயணத் தூரம் 50 கிலோமீற்றரால் குறைவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். வடக்கில் படையினர் வசமிருந்த காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் 75 சதவீதம் பூர்த்தியாகி உள்ளன. எஞ்சிய காணிகளையும் விரைவில் விடுவிக்கப் போவதாக ஜனாதிபதி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில்…