அமெரிக்காவில் இலங்கைப் பெண்ணொருவர் கைது

(UDHAYAM, COLOMBO) – 90 வயதான அமெரிக்கர் ஒருவரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து, இலங்கையைச் சேர்ந்த 58 வயதான பெண் ஒருவர் கைதாகியுள்ளார். அமெரிக்கா – அலபாமாவில் உள்ள மொபைல் பிராந்தியத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த அமெரிக்கரின் வங்கிக் கணக்கிலிருந்து 310,000 டொலர்களை களவாடியதாக இலங்கை பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யலோலா சுரங்கனி மெக்கன்ட் என்ற குறித்தப் பெண், அமெரிக்காவில் இயங்கும் ‘அவர்ரைம்’ என்ற சமுக வலைதளத்தின்…

Read More

வயோதிப பெண்ணொருவர் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை

(UDHAYAM, COLOMBO) – காலி – இமதுவ -ஹெல்லகொட பிரதேசத்தில் வயோதிப பெண்ணொருவர் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். நேற்று இரவு குறித்த பெண் அவரின் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. பின்னர் கடுமையான எரிகாயங்களுடன் அவர் கராபிடிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவற்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் 85 வயதுடைய ஹெல்லகொட -இமதுவ பிரதேசத்தை சேர்ந்த பெண்ணாவார்.

Read More