அமெரிக்காவில் இலங்கைப் பெண்ணொருவர் கைது

(UDHAYAM, COLOMBO) – 90 வயதான அமெரிக்கர் ஒருவரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து, இலங்கையைச் சேர்ந்த 58 வயதான பெண் ஒருவர் கைதாகியுள்ளார்.

அமெரிக்கா – அலபாமாவில் உள்ள மொபைல் பிராந்தியத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த அமெரிக்கரின் வங்கிக் கணக்கிலிருந்து 310,000 டொலர்களை களவாடியதாக இலங்கை பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

யலோலா சுரங்கனி மெக்கன்ட் என்ற குறித்தப் பெண், அமெரிக்காவில் இயங்கும் ‘அவர்ரைம்’ என்ற சமுக வலைதளத்தின் ஊடாக, குறித்த முதியவருடன் அறிமுகமாகி, இந்த மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முதியவரின் கணக்கில் இருந்து 310,000 டொலர்கள் பணம், மெக்கன்டின் கணக்கிற்கு மாற்றப்பட்டதை அறிந்த புலனாய்வாளர்கள் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை அவர் கைதானார்.

அவர் கடந்த 2016ம் ஆண்டு இவ்வாறு முதியவர் ஒருவரை ஏமாற்றி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பெண், அடுத்த மாதம் தமது குடும்பத்துடன் இலங்கை திரும்ப திட்டமிட்டிருந்ததாகவும், விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *